தூத்துக்குடியில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்துக்கு மணி மண்டபம்: தமிழக அரசு அறிவிப்பு
2021-11-14@ 00:15:58

சென்னை: தூத்துக்குடியில் ராவ்பகதூர் குரூர் பர்னாந்துக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாநகர மக்களின் நலன் காத்திட தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து ஆவார். ஏறத்தாழ 30 ஆண்டு காலம் நகரமன்ற உறுப்பினராகவும், ஐந்து முறை நகரமன்றத் தலைவராகவும் இருந்த காலத்தில், சாதி, மத பேதமின்றி அம்மாவட்ட அடித்தள மக்களின் அடிப்படைக் கல்வி மேம்பாடு, குடிசை வீடுகள் மேம்பாடு, தீண்டாமை எதிர்ப்பு, கூட்டுறவு வங்கிக் கடனுதவி, சுகாதார மையங்கள், சனிக்கிழமைச் சந்தை, அங்காடிகள், பொதுவான கல்லறைத் தோட்டம் என நல்லபல திட்டங்களைச் செயல்படுத்தி சாதனை படைத்தவர்.
தன்னலமற்ற தனது தியாகத்தினால், அம்மாவட்ட மக்களின் மனங்களில் இன்றும் உயர்ந்து நிற்கும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து நினைவினைப் போற்றிடும் வகையில், அவரது பிறந்த நாளான நவம்பர் 15 அன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்ததற்கிணங்க, குரூஸ் பர்னாந்துக்கு பெருமைச் சேர்க்கின்ற வகையில் தூத்துக்குடி மாநகரில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் அறிவிப்பு பொறியியல் படிப்புக்கான கட்டணம் அதிகரிப்பு: பிஇ, பிடெக், பிஆர்க் படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600, அதிகபட்ச கட்டணம் ரூ.1,89,800 ஆக நிர்ணயம்
ஆண்டுக்கு 4 டன் ஆக்சிஜன் கிடைப்பதால் மியாவாக்கி காடுகளை அதிகரிக்க திட்டம்: மாநகராட்சி முடிவு
75வது பிறந்த நாள் ஜூன் 4ம் தேதி எஸ்.பி.பிக்கு இசை அஞ்சலி
ஆண்டுக்கு 4 டன் ஆக்சிஜன் கிடைப்பதால் மியாவாக்கி காடுகளை அதிகரிக்க திட்டம்: மாநகராட்சி முடிவு
எனது கருத்தையே பிரதமர் வெளிப்படுத்தினார்: கிச்சா சுதீப்
கும்பமேளாவில் தமிழ் சினிமா படப்பிடிப்பு: இயக்குனர் பேட்டி
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்