பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கு; சமாஜ்வாதி மாஜி அமைச்சருக்கு ஆயுள்: உ.பி சிறப்பு நீதிமன்றம் அதிரடி
2021-11-13@ 17:54:54

லக்னோ: ெபண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரபிரதேச சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உத்தரபிரதேச மாநில முன்னாள் சுரங்கம் மற்றும் போக்குவரத்து அமைச்சரும், சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவருமான காயத்ரி பிரஜாபதி, அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்த போது அமைச்சராக இருந்தார்.
இவர், சுரங்க அமைச்சராக இருந்த காலகட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல் செய்த குற்றச்சாட்டில் சிபிஐ வழக்குபதிவு செய்துள்ளது. முன்னதாக சித்ரகூடத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி கவுதம் பள்ளி காவல் நிலையத்தில் அமைச்சர் மீது பாலியல் புகார் அளித்தார். சுரங்கத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சம்பந்தப்பட்ட பெண்ணை லக்னோவுக்கு வரவழைத்தனர். பின்னர், அந்த பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.
அதேநேரம் அவரது மைனர் மகளையும் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதுதொடர்பாக அம்மாநில டிஜிபி-யிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. பின்னர் அந்த பெண் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்தார். உச்சநீதிமன்ற உத்தரவின்படி குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் காயத்ரி பிரஜாபதி மற்றும் சிலர் மீது கவுதம் பள்ளி போலீசார் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி வழக்குப்பதிவு செய்து, மார்ச் 15ம் தேதி கைது செய்தனர்.
இவ்வழக்கு லக்னோவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணைகள் முடிவுற்ற நிலையில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது கூட்டாளிகள் ஆஷிஷ் சுக்லா மற்றும் அசோக் திவாரி ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மூன்று குற்றவாளிகளுக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் 4 பேர் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
மேலும் செய்திகள்
ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்
பீகார் முதல்வரிடம் 6ம் வகுப்பு மாணவன் புகார் அரசு பள்ளியில் தரமில்லை... படிக்க உதவி பண்ணுங்க...: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
ஒன்றிய அமைச்சரவை அனுமதி பொதுத்துறை நிர்வாக குழுக்களுக்கு பங்குகள் விற்க கூடுதல் அதிகாரம்: துணை நிறுவனங்களை மூடவும் முடிவெடுக்கலாம்
இலங்கை போலதான் இந்தியாவும் உள்ளது மக்களை திசை திருப்புவதன் மூலம் உண்மை நிலையை மாற்றமுடியாது: ஒன்றிய அரசு மீது ராகுல் பாய்ச்சல்
பேரறிவாளன் விடுதலை காங்கிரஸ் கண்டனம்
நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி ஒன்றிய அமைச்சர்களிடம் திமுக எம்பி.க்கள் மனு
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!