SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாணவர்களுக்காக வருந்துகிறோம்.. ஆனால் நீட் மறுதேர்வு நடத்த இயலாது :உச்சநீதிமன்றம் அதிரடி

2021-11-13@ 12:16:20


டெல்லி :  நீட் தேர்வில் கேள்வி பதில் தாள் மாற்றி தரப்பட்டதால் மராட்டியதைச் சேர்ந்த 2 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த மும்பை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 12ம் தேதி அன்று நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வை 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். இதனிடையே மராட்டியத்தில் சோலாப்பூர் தேர்வு மையத்தில் நீட் கேள்வி பதில் மாற்றி வழங்கப்பட்டதாக மாணவர்கள் இருவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இருவரின் முறையீட்டை ஏற்றுக் கொண்ட மும்பை உயர்நீதிமன்றம், அவர்களுக்கு சிறப்பு நீட் மறு  தேர்வு நடத்த உத்தரவிட்டு இருந்தது. மேலும் தேர்வு முடிவுகளை ஒன்றாக வெளியிடவும் உத்தரவிட்டு இருந்தது. மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துவது பற்றி 48 மணி நேரத்தில் பதில் அளிக்கவும் மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தாக்கல் செய்த மேல்முறையீடு மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது 16 லட்சம் பேர் தேர்வு எழுதி இருக்கும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் ஏதாவது ஒரு தவறுக்காக மறு தேர்வை நாடுவார்கள். அப்படி மறுதேர்வு நடந்துவது சாத்தியமில்லை என்று ஒன்றிய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மாணவர்களுக்காக வருந்துகிறோம். அவர்களுக்காக அனுதாபம் கொள்கிறோம். ஆனால் அவர்களுக்கு மறுதேர்வு நடத்த இயலாது என்று கூறி மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • etna-volcano-23

    இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!

  • sandjakki11

    "மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!

  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்