ஆந்திர மாநில காடுகளில் போலீசாரை கொல்ல மூங்கில் மரணகுழி: மாவோயிஸ்ட்டுகள் புது டெக்னிக்
2021-11-12@ 00:45:14

திருமலை: ஆந்திர காடுகளில் சமீப காலமாக மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகமாகி இருக்கிறது. இவர்களை பிடிப்பதற்காக போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்நிலையில, ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் எஸ்பி ரவீந்திரநாத் பாபு உத்தரவின் பேரில், ஆந்திரா- சட்டீஸ்கர் மாநில எல்லையான மல்லம்பேட்டா வனப்பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது சிந்தூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். மோப்ப நாய்கள் மூலம் நடத்திய சோதனையில், போலீசாரை கொல்வதற்காக மாவோயிஸ்ட்டுகளால் நிலத்தில் பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டு, கூரிய மூங்கில் குச்சிகள் நட்டு வைக்கப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
வனப்பகுதியில் போலீசார் செல்லும் பாதைகளில் பள்ளம் தோண்டி, மூங்கிலை ஈட்டி போன்று கூர்முனைகளுடன் செதுக்கி, அவற்றை குழித்தோண்டி புதைத்து, அவை தெரியாத வகையில் கோணி பைகள் போட்டு, இலைகளல் மூடி வைத்து இருந்தனர். போலீசார் அவற்றை பார்க்காமல் மிதித்து விட்டால், குழியில் விழுந்து மூங்கில் குச்சிகளால் குத்தப்பட்டு உயிரிழக்க நேரிடும். வாகனங்கள் இந்த பள்ளத்தில் சிக்கினாலும் டயர்கள் பழுதடைந்து விடும். உடனே, மாவோயிட்டுகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்துள்ளனர்.
மாவோயிஸ்டுகள் இங்கு இருப்பதாக முன்கூட்டியே கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்ய சென்றதால், உஷார்நிலையில் இருந்தனர். அதனால்தான், இந்த மூங்கில் குச்சி மரணகுழிகளை கண்டுபிடித்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், உரிய நேரத்தில் அவை கண்டுபிடிக்கப்பட்டு அகற்றியதால் உயிர் பலி தவிர்க்கப்பட்டது.
மேலும் செய்திகள்
ஆர்யன் கானை போதைப்பொருள் வழக்கில் சிக்கவைத்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீது நடவடிக்கை
லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானதில் 7 வீரர்கள் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்
பொது சிவில் சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய வரைவுக்குழு அமைப்பு
லடாக்கில் நிகழ்ந்த வாகன விபத்தில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை தீவிரம்..!
கொரோனா பேரிடர் காலத்திற்கு பிறகு தமிழக பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் வீழ்ச்சி!: ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!
பிரதமர் மோடிக்கு 17 கேள்விகளுடன் ஐதராபாத் முழுவதும் பதாகைகள்: தெலுங்கானா மாநிலத்துக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்ன?.. என கேள்வி..!
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!