SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மழைநீர் வடிகால் பணிகளுக்காக அதிமுக செலவழித்த பலநூறு கோடி எங்கே?.. மக்கள் நீதி மய்யம் கேள்வி

2021-11-11@ 01:58:53

சென்னை: மக்கள் நீதி மய்யம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை: சென்னை மாநகரம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பல வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. சாலைகளில் தேங்கி இருக்கும் நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை சவாலுக்குள்ளாகி இருக்கிறது. ‘ஒருநாள் மழைக்கே மூழ்கும் நகரம்’ என்ற பெயரை சென்னை பெற்றுள்ளது. கூவம், அடையாறு போன்ற ஆறுகள், 16 கால்வாய்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததே மழைக்காலங்களில் சென்னை வெள்ளத்தில் தத்தளிப்பதற்கு முக்கிய காரணம். மழைநீர் வடிகால், கழிவுநீர் வடிகால் பராமரிப்பு பணிகளுக்காக, சென்னை மாநகராட்சி ஆண்டுதோறும் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிடுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக செலவிடப்பட்ட தொகை பலநூறு கோடி ரூபாய்.

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகளுக்காக தியாகராய நகரில் மட்டும் ரூ.200 கோடி செலவிடப்பட்டு இருப்பதாக கணக்கு. ஆனால், மழை பெய்தால் தி.நகர் தீவு நகராகி விடுகிறது. இத்தனை கோடிகளை செலவழித்தும் சென்னை வெள்ளத்தில் மூழ்க காரணம் என்ன? ‘கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்துக்கு பிறகு, 6 ஆண்டுகள் சென்னை மாநகராட்சி என்ன செய்து கொண்டிருந்தது?’ என்று சென்னை உயர் நீதிமன்றம் எழுப்பியிருக்கும் கேள்விக்கு பதில் என்ன? தற்காலிக தீர்வுக்கு பதிலாக, தொலைநோக்கு பார்வையுடனான தெளிவான திட்டங்கள் நிறைவேற்றப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Coimbatore jallikattu

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

  • pipin-statue-21

    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

  • rose-shaped-coral-21

    என்ன ஒரு அழகு!!!: டஹிடி தீவின் கடலுக்கு அடியே சுமார் 3 கி.மீ நீளமுள்ள ராட்சத ரோஜா வடிவ பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு..!!

  • Trichy_Thiruverumbur_Koothappar_Jallikattu

    திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதி ஜல்லிகட்டு போட்டி: சீறி பாயும் காளைகள்

  • Marinaa

    சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்