ஜம்முவில் 18 மாதங்களில் பணிகள் முடியும் அயோத்தியில் இடம் கிடைத்தால் பெருமாள் கோயில் கட்டப்படும்: திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் தகவல்
2021-11-11@ 00:39:00

திருமலை: ஜம்முவில் பெருமாள் கோயில் கட்டும் பணி 18 மாதங்களில் நிறைவு பெறும் என்றும், அயோத்தியில் இடம் கிடைத்தால் பெருமாள் கோயில் கட்டப்படும் என்றும் திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் சுப்பா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் ஆலோசனைக் குழுவின் தலைவராக பிரசாந்தி நேற்று பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அறங்காவலர் குழுத்தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி பங்கேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வடக்கில் உள்ள கோயில்களை விரிவுப்படுத்த டெல்லி ஆலோசனைக் குழு செயல்படும். டெல்லி மற்றும் குருசேத்திரம் உட்பட பல இடங்களில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கோயில்கள் உள்ளது.
ஜம்முவில் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் 18 மாதங்களில் பெருமாள் கோயில் கட்டி முடிக்கப்படும். அயோத்தியில் நிலம் ஒதுக்குமாறு ராமஜென்மபூமி கோயில் கட்டுமானக் குழுவிடம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டுள்ளது. கோயில் கட்டுமான குழுவினர் அளிக்கும் பதிலை வைத்து அங்கு பெருமாள் கோயில் கட்டுவதா அல்லது பஜனை மண்டபம் அமைப்பதா என்பது குறித்து முடிவு செய்யப்படும். இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் விதமாக, விவசாயிகளிடம் இருந்து தேவஸ்தானமே நேரடியாக கொள்முதல் செய்ய உள்ளது. ஏழுமலையானுக்கு படைக்கும் நெய்வேத்தியம், பக்தர்களுக்கான அன்னப் பிரசாதம் இவற்றை கொண்டே தயாரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
Jammu 18 months Completion of works Ayodhya Venue Perumal Temple Tirupati Board of Trustees Chairman Information ஜம்மு 18 மாத பணிகள் முடியும் அயோத்தி இடம் பெருமாள் கோயில் திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் தகவல்மேலும் செய்திகள்
பல்கலை. வேந்தர் ஆளுநர்தான் மாநில அரசுகள் பின்பற்றணும்: ஒன்றிய கல்வி அமைச்சர் பேட்டி
பினராயிக்கு எதிராக புகார் கூறியதால் சொப்னாவுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது
ஆந்திராவில் சிலை திறப்பு விழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் போராட்டம்: பாதுகாப்பு விதிமீறல் என குற்றச்சாட்டு
அக்னிபாதை திட்டத்திற்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணை
ஓட்டல் உணவுகளுக்கு சேவை கட்டணம் வசூலிக்க கூடாது
இமாச்சல் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 13 பேர் பலி: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!