தமிழ்நாட்டில், கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்தும் நடைமுறையை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் : ஐகோர்ட்!!
2021-11-10@ 15:17:52

சென்னை : தமிழகத்தில் கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்தும் நடைமுறையை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு மனிதர்களை பயன்படுத்துவதை எதிர்த்தும் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் நிவாரணம் பெறுவதை உறுதி செய்யக்கோரியும் 'சபாய் கர்மாச்சாரி அந்தோலன்' என்ற அமைப்பின் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்ட ஆலோசனைகள் குறித்த அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்தது.தமிழகத்தில் எந்த மாநகராட்சியிலும் கழிவுகளை அகற்ற மனிதர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்படுவோருக்கு மாற்று வேலை உள்ளது என விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும், பாதாள சாக்கடைகளில் கழிவுகளை அகற்றும் போது பலியானவர்களுக்கு வழங்கப்படும் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு போதாது என்பதால் அதை அதிகரித்து வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர்.
Tags:
பாதாளச் சாக்கடைமேலும் செய்திகள்
வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
8வது மண்டல பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
சிந்தாதிரிப்பேட்டை பாஜ பிரமுகர் கொலை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: கமிஷனர் சங்கர்ஜிவால் அதிரடி
மில்லிங் செய்யாமல் சாலை அமைத்த நிர்வாக பொறியாளர் மாற்றம்: மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை
தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்த குழந்தைகளை ஒப்படைக்கோரி வழக்கு மைனர் பெண் குழந்தைகளின் தேவை தாய்க்குத்தான் தெரியும்: உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
பாதுகாப்பான சென்னை என்ற கருத்தை வலியுறுத்தி பெண்களுக்கான இரவு நேர மிதிவண்டி ஓட்டும் நிகழ்ச்சி: 6 இடங்களில் இன்று நடக்கிறது
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!