தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்பு ஆப்கான் அச்சுறுத்தல் பற்றி டெல்லியில் இன்று மாநாடு: பாகிஸ்தான் புறக்கணிப்பு; சீனா நொண்டிச்சாக்கு
2021-11-10@ 02:15:53

புதுடெல்லி: தலிபான்களால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக, டெல்லியில் இன்று பல்வேறு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு நடைபெறுகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் ஆட்சியை பிடித்துள்ளதால், அண்டை நாடுகள் மட்டுமின்றி உலகளவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டிலும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இதனால், ஆப்கானிஸ்தானால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக ஆலோசிக்க, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, ஈரான், 5 மத்திய ஆசிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்கும் மாநாட்டுக்கு இந்தியா ஏற்பாடு செய்துள்ளது. இதில் ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான், கிரிகிஸ்தான், தஜகிஸ்தான், துர்மெனிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளன.
இந்த கூட்டம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. சீனா, பாகிஸ்தானிடம் இருந்து அதிகாரபூர்வ தகவல் இல்லை என்பதால், அவை இக்கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியானது.சில காரணங்களால் பங்கேற்க முடியவி்ல்லை என்று கூறியுள்ள சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், `ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளின் காரணத்தால், இந்த மாநாட்டில் சீனாவால் கலந்து கொள்ள முடியவில்லை. இது தொடர்பாக சீனா தரப்பில் இருந்து இந்தியாவுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,’ என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
குதிரை பந்தயம், கேளிக்கை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி; அமைச்சர்கள் குழு அதிரடி முடிவு
வரும் 29ம் தேதி முதல் இந்தியா- வங்கதேசம் இடையே மீண்டும் ரயில் சேவை
காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர்ராமனுக்கு 4 நாள் சிபிஐ காவல்: டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்து கள்ளக்காதலி கழுத்து நெரித்துக் கொலை : கேரளாவில் ஓட்டல் அறையில் பரபரப்பு
இந்தியாவுடன் இணைந்து வெளிநாட்டு திரைப்படம் தயாரிப்போருக்கு ஊக்கத்தொகை: கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு
சாலை விபத்து வழக்கில் 34 ஆண்டுகளுக்குப் பின்னர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு சிறைத்தண்டனை; உச்சநீதிமன்றம் தீர்ப்பு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!