SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நான் நீதிக்காக போராடுபவன் நீங்கள் நீதியை சீர்குலைப்பவர்: மாஜி தலைமை வக்கீல் மீது சித்து பாய்ச்சல்

2021-11-08@ 01:41:57

சண்டிகர்: பஞ்சாப் மாநில அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த தியோலுக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவுக்கும் இடையேயான மோதல் முற்றி உள்ளது. பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை சித்து சமீபத்தில் ராஜினாமா செய்தார். முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான புதிய அரசின் அட்வகேட் ஜெனரலாக தியோல் நியமிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவர் ராஜினாமா செய்தார். பஞ்சாபின் பரித்கோட்டில் உள்ள குருத்வாராவில் கடந்த 2015ல் புனித நூல் எரிக்கப்பட்டதாக வன்முறை ஏற்பட்டது. அப்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாயினர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட போலீசாருக்காக தியோல் ஆஜரானவர் என்பதாலேயே அவரை எதிர்ப்பதாக சித்து கூறினார். சித்துவின் கடும் எதிர்ப்பால், தியோல் கடந்த 1ம் தேதி பதவி விலகினார்.

இதற்கிடையே, இருதினங்களுக்கு முன் தனது ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற்ற சித்து, புதிய அட்வகேட் ஜெனரல் நியமிக்கப்படும் வரையில் தலைவர் பதவியை ஏற்க மாட்டேன் என்று அறிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த தியோல், ‘தனது அரசியல் ஆதாயத்திற்காக சித்து பொய்யான தகவல்களை கூறுகிறார்,’ என குற்றம்சாட்டினார். இதற்கு சித்து நேற்று தனது டிவிட்டரில், ‘புனித நூல் எரிப்பு வழக்கில் நீதி பெற்றுத் தருவோம் என வாக்குறுதி தந்துதான் ஆட்சியை பிடித்துள்ளோம். அந்த வழக்கில்தான் முக்கிய குற்றவாளியின் வக்கீலாக நீங்கள் (தியோல்) ஆஜராகி, எங்கள் அரசுக்கு எதிராக வாதாடினீர்கள். இன்று அதே அரசில், அரசு தரப்பு வக்கீலாக நியமிக்கப்பட்ட நீங்கள், என் மீது குற்றம்சாட்டுகிறீர்கள். நீதிக்காக போராடுபவன் நான். அந்த நீதியை நிலைநாட்டுவதற்கு பதிலாக அதை சீர்குலைப்பவர் நீங்கள்,’ என பதிலடி தந்துள்ளார். இந்த விவகாரம் பஞ்சாப் அரசியலில் பரபரப்பாகி உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Coimbatore jallikattu

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

 • pipin-statue-21

  குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

 • rose-shaped-coral-21

  என்ன ஒரு அழகு!!!: டஹிடி தீவின் கடலுக்கு அடியே சுமார் 3 கி.மீ நீளமுள்ள ராட்சத ரோஜா வடிவ பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு..!!

 • Trichy_Thiruverumbur_Koothappar_Jallikattu

  திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதி ஜல்லிகட்டு போட்டி: சீறி பாயும் காளைகள்

 • Marinaa

  சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்