அணுமின் நிலைய அவசர கால ஒத்திகை ஆலோசனை கூட்டம்
2021-11-08@ 01:00:59

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் சென்னை அணுமின் நிலையம், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகிறது. இம் மையங்களில் அவசரகால தயார் நிலை திட்டத்தின்படி மையம் தாண்டிய அவசர நிலை ஒத்திகை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தற்போது வருகின்ற 11ம் தேதி இந்த அவசர கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ளது. இது சம்மந்தமான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் கல்பாக்கம் அணுமின் நிலைய விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. இதில், சென்னை அணுமின் நிலைய இயக்குனர் பலராமமூர்த்தி கலந்து கொண்டு பாதுகாப்பு அவசர நிலை ஒத்திகை குறித்தும், மாவட்ட நிர்வாகம் மற்றும் அணுமின் நிலையம் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கங்கள் அளித்தார். மேலும், அவசர நிலை குழுவின் செயல் உறுப்பினர் ரவிசங்கர், கதிர்வீச்சு பாதுகாப்பு அதிகாரி ராஜகோபால், அணுமின் நிலைய அதிகாரிகள் சீனிவாசன், வரலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:
Nuclear power plant emergency rehearsal consultation meeting அணுமின் நிலைய அவசர கால ஒத்திகை ஆலோசனை கூட்டம்மேலும் செய்திகள்
கோடை மழை எதிரொலி சோலையார் அணையின் நீர்மட்டம் 42 அடியாக உயர்வு
ஆழியார் அணையில் ஒன்றிய ரிசர்வ் படை கல்லூரி வீரர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி
மதுக்கரை வட்டாரத்தில் கல் குவாரிகளில் ஆய்வு
மாநகரில் தெருநாய் கணக்கெடுப்பு பணி துவங்கியது
விருதுநகர் அருகே எண்ணெய் ஆலையில் தீ விபத்து
தமிழகத்தில் முதல்முறையாக; பெரம்பலூரில் அமோனைட்ஸ் அருங்காட்சியகம்: கலெக்டர் ஆய்வு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்