அமுதா ஐஏஸ் உள்பட தமிழ்நாட்டில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு
2021-11-06@ 21:43:50

சென்னை: தமிழ்நாட்டில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழக ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளராக அமுதா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், மேலும் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஒன்றிய அரசின் பணியில் இருந்த அமுதா ஐஏஸ் அண்மையில் மாநில பணிக்கு திரும்பிய நிலையில், அவர் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல், தொழிற்துறையின் கூடுதல் தலைமை செயலாளராக கிருஷ்ணன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை அந்த பதவியில் முருகானந்தம், நிதித்துறை முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
போக்குவரத்து துறை முதன்மை செயலராக கோபால் நியமிக்கப்பட்டுள்ளார். நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலர் பதவி, சந்தீப் சக்சேனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும , பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலராக தயானந்த் கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளார். தர்மேந்திர பிரதாப் யாதவ் , கைத்தறி மற்றும் துணி நூல், கதர் துறை முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், எரிசக்தி துறை முதன்மை செயலராக ரமேஷ் சந்த் மீனாவும், விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் முதன்மை செயலராக, அபூர்வாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். நில சீர்திருத்தத் துறை செயலராக பீலா ராஜேஷ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, அரசு செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
முதல் நாளே அதிரடி சோதனை; சென்னையில் பைக்கின் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாத 367 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் குளுகுளு அறிவிப்பு!!
சென்னை ராணி மேரி கல்லூரியில் மே 25ல் இளைஞர் திறன் திருவிழாவை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
வரி குறைப்பு போதாது!: ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து மே 25 முதல் ஒரு வாரம் போராட்டம்..கம்யூ., விசிக கூட்டாக அறிவிப்பு..!!
ஒரகடம் அருகே ரூ.155 கோடியில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐசி மருத்துவமனை: ஒன்றிய அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் ஆய்வு 300 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்