தொடர் விடுமுறை எதிரொலி; ஊட்டியில் 5 ஆயிரம் பேர் குவிந்தனர்
2021-11-06@ 16:24:16

ஊட்டி: தொடர் விடுமுறையால் ஊட்டியில் நேற்று 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இரண்டாவது சீசன் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் தேனிலவு தம்பதிகள் வருகையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக வார நாட்களை காட்டிலும் வார இறுதி நாட்களிலும் தொடர் விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்ட நிலையில் தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா உள்ளிட்ட இடங்களில் கடந்த இரு நாட்களாக சுற்றுலா பயணிகள் அதிக அளவில் தென்பட்டனர். தீபாவளி தினத்தன்று ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு 9 ஆயிரத்து 800 பேர் வந்து சென்றுள்ளனர். நேற்றைய தினம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர். வரும் ஞாயிற்றுகிழமை வரை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
சேலம்-விருத்தாசலம் பயணிகள் ரயில் இன்று முதல் தினமும் இருமுறை இயக்கம்
கொடைக்கானலில் மலர் கண்காட்சி நாளை துவக்கம்
விழுப்புரத்தில் பரபரப்பு கழுத்தை அறுத்து முன்னாள் கவுன்சிலரை கொல்ல முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
ஓஎன்ஜிசி குழாய் உடைந்து கச்சா எண்ணெய் பரவியதால் 2 ஏக்கர் விவசாய நிலம் சேதம்
அழகர்கோவில் பகுதியில் மண்பானை தயாரிக்கும் பணி தீவிரம்
பஸ் கண்ணாடியை உடைத்து டிரைவர் கண்டக்டர் மீது தாக்குதல் : தொழிலாளிக்கு வலை
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை