ஆர்யன் கான் மீதான வழக்கு டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு மாற்றம்: சர்ச்சைக்குரிய வான்கடேவுக்கு பழைய பதவி
2021-11-06@ 05:33:56

புதுடெல்லி: மும்பை அருகே சொகுசு கப்பலில் போதை விருந்து நடந்தபோது அதிரடியாக நுழைந்த மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவு, பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோரை கைது செய்தது. இந்த வழக்கை மும்பை மண்டல போதை பொருள் தடுப்பு பிரிவின் இயக்குனர் சமீர் வான்கடே விசாரித்தார். இந்த வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க இவர் ரூ.25 கோடி பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், பல பிரபல நடிகர்கள், முக்கிய பிரமுகர்களிடம் இருந்து இவர் ரூ.1000 ஆயிரம் பறித்து இருப்பதாகவும் மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறார்.
இதனால், வான்கடேவை மும்பை போலீசார் எந்த நேரத்திலும் கைது செய்வார்கள் என்ற நிலை இருந்து வருகிறது. ஆர்யன் கான் உள்ளிட்டோருக்கு மும்பை உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஜாமீன் வழங்கிய நிலையில், இவர்கள் மீதான வழக்கின் விசாரணையை டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவின் சிறப்பு புலனாய்வு குழுக்கு மாற்றி, நேற்றிரவு அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கில் வெளிநாட்டு தொடர்பு இருப்பதால், வழக்கு விசாரணை மாற்றப்பட்டதாக கூறியுள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு, வான்கடே தொடர்ந்து மும்பை மண்டல இயக்குனராக நீடிப்பார் என்றும் தெரிவித்துள்ளது.
Tags:
Aryan Khan case Delhi Narcotics Division change old post to Wankhede ஆர்யன் கான் வழக்கு டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு மாற்றம் வான்கடே பழைய பதவிமேலும் செய்திகள்
இந்தியாவில் உள்ள ரயில்வே தண்டவாளங்களை தகர்க்க பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு திட்டம்? அதிர்ச்சி தகவல்
பிறரின் மத உணர்வை காயப்படுத்தும் துணைவேந்தரின் இந்த உத்தரவை வாபஸ் பெறுக: மீரட் பல்கலை. சுற்றறிக்கைக்கு இந்திய தேசிய மாணவர்கள் சங்கம் கண்டனம்
நாட்டையே உலுக்கிய விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவர் குற்றவாளி என தீர்ப்பு: கொல்லம் கூடுதல் நீதிமன்றம் அதிரடி..!!
ஆந்திராவில் கோடை மழையால் விவசாய நிலங்களில் மக்கள் வைர வேட்டை-பல ஆண்டுகால விநோத நம்பிக்கை
சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து ₹4 லட்சம் பீர் பாட்டில்களை அள்ளிச்சென்ற குடிமகன்கள்-ஆந்திராவில் பரபரப்பு
பாஜகவை சேர்ந்த நடிகையான ஹேமமாலினி கன்னம் போல் இருக்கு சாலை : சட்டீஸ்கர் காங். அமைச்சர் பேச்சால் சலசலப்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்