தீபாவளி பண்டிகை விடுமுறை நீட்டிப்பு எதிரொலி சென்னை செல்லும் தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்: காத்திருப்போர் பட்டியல் 100ஐ தாண்டியது
2021-11-06@ 00:51:29

நெல்லை: தீபாவளி பண்டிகைக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறையால் தென் மாவட்ட ரயில்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. நாளை (7ம் தேதி) சென்னைக்கு செல்லும் எந்த ரயிலிலும் இடமில்லை. காத்திருப்போர் பட்டியல் அனைத்து ரயில்களிலும் 100ஐ தாண்டியுள்ளது. தீபாவளி பண்டிகை கடந்த 4ம் தேதி கொண்டாடப்பட்டது. ஆரம்பத்தில் ஒரு நாள் விடுமுறை என்று இருந்த நிலையில் 5ம் தேதியும் சேர்த்து தமிழக அரசு விடுமுறை அறிவித்தது. இதனால் அரசு அலுவலகங்களுக்கும் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைத்தது.
இந்நிலையில் பண்டிகை முடிந்து நாளை (7ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை சென்னை செல்வதற்காக தென் மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் அனைத்து ரயில்களும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக நெல்லையில் இருந்து இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி காத்திருப்போர் எண்ணிக்கை நேற்று மாலை நிலவரப்படி 105 ஆக இருந்தது. மூன்று அடுக்கு குளிர்சாதன வசதியில் காத்திரப்போர் பட்டியல் 23 ஆக இருந்தது. குமரியில் இருந்து இயக்கப்படும் கன்னியாகுமரி - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டாம் வகுப்பு காத்திருப்போர் பட்டியல் 98 ஆக உள்ளது.
மூன்று அடுக்கு ஏசி வசதிக்கு காத்திருப்போர் எண்ணிக்கை 32 ஆக இருந்தது. கொல்லம் - சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டாம் வகுப்பில் காத்திருப்போர் எண்ணிக்கை 142 ஆகவும், மூன்று அடுக்கு ஏசிக்கு 29 ஆகவும் இருந்தது. திருச்செந்தூர் - சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டாம் வகுப்பிற்கு 56 பேரும், மூன்று அடுக்கு ஏசிக்கு 20 பேரும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். பகல் நேரத்தில் சென்னைக்கு இயக்கப்படும் குருவாயூர் - சென்னை ரயிலிலும் காத்திருப்போர் எண்ணிக்கை 100ஐ தாண்டிவிட்டது. இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பிற்கு 142 பேரும், மூன்று அடுக்கு ஏசிக்கு 29 பேரும் இடத்திற்காக காத்திருக்கின்றனர். நெல்லையில் இருந்தும், நெல்லை வழியாகவும் 8 ரயில்கள் 7ம் தேதி சென்னைக்கு இயக்கப்படும் போதிலும், எந்த ரயிலிலும் இடமில்லை.
Tags:
Deepavali Holiday Extension Chennai South District Trains Housepool தீபாவளி விடுமுறை நீட்டிப்பு சென்னை தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்மேலும் செய்திகள்
நடிகை பலாத்கார காட்சிகள் அடங்கிய மெமரி கார்டை தடயவியல்; பரிசோதனைக்கு அனுப்ப கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
நெல்லை - மேட்டுப்பாளையம், தாம்பரம் உள்ளிட்ட 4 சிறப்பு ரயில்களை நீடிப்பு செய்ய தெற்கு ரயில்வே முடிவு: ரயில்வே வாரியத்தின் அனுமதிக்காக காத்திருப்பு
நாலுமாவடியில் நாளை மறுநாள் புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனை திறப்பு விழா
குன்னூர் பள்ளத்தாக்கு பகுதியில் குட்டிகளுக்கு நடைபயிற்சி அளிக்கும்; 10 யானைகள்
குழந்தை பாக்கியம் தரும் மருத்துவ குணம் வாய்ந்தது; குன்னூர் பர்லியார் பண்ணையில் துரியன் பழம் சீசன் துவங்கியது
இலங்கை கடற்படை கைது செய்த காரைக்கால், தமிழக மீனவர்கள் 12 பேரை விடுவிக்க நடவடிக்கை: வெளியுறவு அமைச்சருக்கு ரங்கசாமி கடிதம்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!