குன்னூரில் பரபரப்பு நிர்வாணமாக அடுத்தவரின் வீட்டிற்குள் புகுந்த அதிமுக மாஜி எம்பிக்கு அடி, உதை: வீடியோ வெளியானதை தொடர்ந்து வழக்குப்பதிவு
2021-11-06@ 00:42:38

குன்னூர்: நீலகிரி மாவட்ட அதிமுக மாஜி எம்பி மது போதையில் அடுத்தவரின் வீட்டிற்குள் நிர்வாணமாக புகுந்தார். அவரை வீட்டின் உரிமையாளரும், அவரது மகனும் அடித்து உதைத்த வீடியோ வெளியானது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். அதிமுக நீலகிரி மாவட்ட அவைத் தலைவராக இருப்பவர் கோபாலகிருஷ்ணன். இவர் 2014-2019ல் நீலகிரி பாராளுமன்ற தொகுதி எம்பியாகவும் இருந்துள்ளார். எம்.பி.யாக பணியாற்றியபோது போலீசாரை மிரட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இவரின் வீடு குன்னூர் முத்தாளம்மன் பேட்டையில் உள்ளது.
நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையையொட்டி மாஜி அதிமுக எம்.பி. கோபாலகிருஷ்ணன் மது அருந்தியுள்ளார். பின்னர் போதையில் அதே பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டிற்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் நிர்வாணமாக இருந் ததாக தெரிகிறது. இதைப் பார்த்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் கோபாலகிருஷ்ணனை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். அவர் நிர்வாணமாக இருப்பதை வீடியோ பதிவு செய்துள்ளனர். பின்னர் இது குறித்து குன்னூர் போலீசாரிடம் புகார் அளித்தனர். கோபாலகிருஷ்ணனும் தான் தாக்கப்பட்டதாக கூறி குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து இரு தரப்பினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பான வீடியோவையும் பார்த்தனர். இதையடுத்து, வீட்டிற்குள் நிர்வாணமாக புகுந்ததாக கோபாலகிருஷ்ணன் மீதும், அவர் மீது தாக்குதல் நடத்திய வீட்டின் உரிமையாளர் கோபி, அவரது மகன் மீதும் வழக்குபபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக மாஜி எம்.பி. மது போதையில் நிர்வாணமாக அடுத்தவரின் வீட்டிற்குள் புகுந்த சம்பவம் நீலகிரி அதிமுகவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
வடக்கிபாளையம் பிரிவு மேம்பால பக்கவாட்டு சுவரில் தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை
ஊழல் தலை விரித்தாடுகிறது: திட்டங்களை தட்டிப்பறிப்பதாக விவசாயிகள் வேதனை
தொடர் மழை எதிரொலி; ஏற்காடு மலைப்பாதையில் விழுந்த ராட்சத பாறை: பொக்லைன் கொண்டு அகற்றம்
அந்தரத்தில் மிதந்தபடியே ஏரியின் எழிலை ரசிக்கலாம்: கொடைக்கானலில் ஜிப் லைன் சுற்றுலா அறிமுகம்
கீழடியில் இரும்பு துண்டுகள் உருக்கு கழிவுகள் கண்டெடுப்பு
இயற்கை எரிவாயு இணைப்புக்கு சேலத்தில் குழாய் பதிப்பு தீவிரம்: விரைவில் வீடுகளுக்கு வழங்க முடிவு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்