குழந்தைகளுக்கு தீபாவளி டிரஸ் கேட்டதால் தகராறு உருட்டுக்கட்டையால் தலையில் அடித்து மனைவி படுகொலை: போதை கணவர் வெறிச்செயல்; ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு
2021-11-04@ 01:24:45

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே குழந்தைகளுக்கு தீபாவளி டிரஸ் ஏன் எடுத்துக் கொடுக்க வில்லை என போதை கணவரிடம் தகராறு செய்த மனைவி, உருட்டுக் கட்டையால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே மேவளூர்குப்பம், தாமம், கிறிஸ்தவ கண்டிகை, நடுத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (42). கீவளூர் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தூய்மைப்பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி குமாரி (37). மாற்றுத்திறனாளி. இவர்களுக்கு கீவ்தி, கிரேசி என்ற இரண்டு மகள்கள். கீவ்திக்கு திருமணமாகி வளர்புரத்தில் வசித்து வருகிறாள்.
வெங்கடேசன், குமாரி, கிரேசி ஆகியோர் கிறிஸ்தவ கண்டிகை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களில், கிரேசியும் ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு வெங்கடேசன் குடித்துவிட்டு வீடு திரும்பி உள்ளார். அப்போது, மனைவி குமாரி, இதேபோல் தினமும் மது அருந்திவிட்டு சம்பாதிக்கிற காசை செலவழிக்கிறீர்களே. தீபாவளிக்கு 2 பசங்களுக்கும் டிரஸ் எடுக்கவில்லையே என கேட்டு சண்டை போட்டுள்ளார். இருவருக்கும் வாய்த்தகராறு முற்றி கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், குமாரி வீட்டிற்கு வெளியே வந்து படுத்துள்ளார்.
இந்நிலையில் அதிகாலை 2.30 மணி அளவில் வெளியே வந்த வெங்கடேசன், படுத்து தூங்கிக் கொண்டிருந்த மனைவி குமாரியை உருட்டுக்கட்டையால் தலையில் சரமாரியாக அடித்து உள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். படுகாயம் அடைந்த குமாரி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். உடனே, வீட்டிற்குள் புகுந்து வெங்கடேசன் தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், குமாரியின் உடலை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வெங்கடேசன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
Child Deepavali Wife Murder Drug Husband Sriperumbudur குழந்தை தீபாவளி மனைவி படுகொலை போதை கணவர் ஸ்ரீபெரும்புதூர்மேலும் செய்திகள்
ஓட்டப்பிடாரம் அருகே சொத்து தகராறில் பயங்கரம்; தம்பி சரமாரி குத்திக் கொலை: ராணுவ வீரர் வெறிச்செயல்
செங்கத்தில் இருந்து புதுச்சேரிக்கு கடத்திய 10 கிலோ சந்தன கட்டை பறிமுதல்: வாலிபர் கைது
திருவண்ணாமலை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு: சிபிசிஐடி விசாரணையில் அம்பலம்
காதல் மனைவியுடன் சேர்ந்து வாழ தடையாக இருந்த மாமியார்: குழவிக் கல்லை போட்டு கொன்ற மருமகன் கைது
கோயம்பேட்டில் தூங்குவதற்கு இடம் பிடிப்பதில் தகராறு வாலிபருக்கு தலையில் கத்தி வெட்டு; நண்பர் கைது
புளியந்தோப்பில் கோயிலை உடைத்து திருடப்பட்ட ஐம்பொன் சிலைகள் மீட்பு: ஆட்டோ டிரைவர் உட்பட 2 பேர் கைது
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!