மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத்தேர்வு தேர்வு முடிவுகள் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்: அரசு தேர்வு இயக்ககம் அறிவிப்பு
2021-11-04@ 01:08:31

சென்னை: தமிழக அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்ட அறிக்கை: மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வு செப்டம்பர் 2021 தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியல்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளுதல், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த செய்திக்குறிப்பு செப்டம்பர் 2021 மாதத்தில் நடைபெற்ற மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வெழுதிய தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவினை மதிப்பெண் பட்டியலாகவே 9.11.2021 காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
செப்டம்பர் 2021 மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்த மாற்றுத் திறனாளி தனித்தேர்வர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. எனவே, மாற்றுத் திறனாளி தனித்தேர்வர்களும் மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி, மதிப்பெண் பட்டியலைபதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளத்தில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் தேர்வர்கள் வரும் 9.11.2021 அன்று காலை 11 மணி முதல் தங்களது மதிப்பெண் பட்டியல்களை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று ரிசல்ட் என்ற பகுதியில் உள்ள Statement Of Marks- Sep 2021 HSE First Year suppl. Exam-Result என்ற வாசகத்தினை கிளக் தோன்றும் பக்கத்தில் தேர்வர்கள் தங்களது தேர்வெண் மற்றும் பிறந்ததேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, தங்களது மதிப்பெண் பட்டியலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
செப்டம்பர் 2021, மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு 11.11.2021 மற்றும் 12.11.2021 ஆகிய இரண்டு நாட்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும். தேர்வர்கள் தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும். விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.
விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணம் பாடம் (ஒவ்வொன்றிற்கும்) ரூ.275 மறுகூட்டலுக்கான கட்டணம் உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ.305, ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) ரூ.205 விடைத்தாள் நகல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிக்கும் நாட்களில், தேர்வர்கள் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். மேலும் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு செல்லும் பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிந்து, போதிய சமூக இடைவெளியினைக் கடைபிடித்தல் வேண்டும். தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்ய வேண்டும்.
Tags:
Overhead First Year Sub-Examination Score List Download மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத்தேர்வு மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம்மேலும் செய்திகள்
சென்னை மாநகராட்சி பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 118 வளர்ச்சி பணிகள் நிறைவு: அதிகாரிகள் தகவல்
பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பட்டதாரி, முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
மின்வாரிய குறைதீர் கூட்டம்
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து: வாகன ஓட்டிகள் கடும் அவதி
சியுஇடி நுழைவு தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு
பத்திரப்பதிவுத்துறையில் 12 மாவட்ட பதிவாளர்கள் பணியிட மாற்றம்
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!