வன்னியருக்கு உள் ஒதுக்கீடு முதல்வர் பதவி ஆசையால் எடப்பாடி போட்ட சட்டம்: அவசர கோலத்தால் ரத்து; நடிகர் கருணாஸ் குற்றச்சாட்டு
2021-11-03@ 00:07:10

மதுரை: முதல்வர் பதவி ஆசையால், அவசரகோலத்தில் எடப்பாடி பழனிசாமி வன்னியருக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்ததாக நடிகர் கருணாஸ் குற்றம் சாட்டியுள்ளார். முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் மதுரையில் நேற்று அளித்த பேட்டி: வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு வழக்கில் சமூகநீதியை காக்கும் வகையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். முதலமைச்சர் பதவி ஆசை காரணமாக ஒரு சமூகத்தினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கி, அவசரகோலத்தில் எடப்பாடி சட்டத்தை இயற்றினார். அதன் காரணமாகத்தான் தற்போது இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கான பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படவே இல்லை. அந்த சமூகத்தினர் இல்லாத இடங்களில் அரசு பணியிடம் நிரப்பப்படாமல் உள்ள நிலைதான் தொடர்கிறது. குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் கணக்கெடுப்பின்றி இட ஒதுக்கீடு வழங்குவது சரியான சமூகநீதியாக இருக்காது. சமூகநீதி காக்க வேண்டும் என்றால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்விக்கு காரணம் இந்த உள் இடஒதுக்கீடு அறிவிப்பு தான். அதிமுக ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை நோக்கி சென்றதுதான். மேலும் அதிமுக குறித்து கருத்து சொல்ல பிடிக்கவில்லை. நாங்கள் தேர்தல் நேரத்தில் 12 கோரிக்கைகளை வலியுறுத்தினோம், அதனை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால்தான் தேர்தலில் தோல்வி அடைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
Vanniyar internal allocation Chief Minister's post Edappadi law actor Karunas charge வன்னியருக்கு உள் ஒதுக்கீடு முதல்வர் பதவி எடப்பாடி போட்ட சட்டம் நடிகர் கருணாஸ் குற்றச்சாட்டுமேலும் செய்திகள்
முதலமைச்சரின் உரையை விமர்சிப்பது அண்ணாமலையின் அரைவேக்காட்டுத்தனம்” -சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் காட்டம்..!
பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழகத்திற்கான தேவைகளைதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறார்: அண்ணாமலை பேச்சுக்கு துரை வைகோ பதிலடி
சொல்லிட்டாங்க...
ஐதராபாத்தில் மோடி பேச்சு தெலங்கானாவில் ஆட்சி இனிதான் ஆட்டம் ஆரம்பம்
மாநிலங்களவை வேட்பாளர் யார்? சோனியா காந்தியுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு
பிரதமரின் வருகையால் தமிழகத்துக்கு பல நன்மை கிடைக்கப்போகிறது: தமிழக பாஜ தலைவர் அறிக்கை
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!