வருவாய் வாரியாக பிரித்து 575 சார்பதிவாளர் அலுவலக ரேங்க் பட்டியல் வெளியீடு
2021-11-03@ 00:02:49

* முதல் இடம் திருப்போரூர்
* 575வது இடம் குமரச்சி
சென்னை: தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகம் மூலம் வீடு, விளை நிலங்கள் உள்ளிட்ட சொத்து பரிமாற்றம் பதிவு செய்யப்படுகிறது. இதில், சென்னை, கோவை, மதுரை போன்ற பெரிய நகரங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது. எனவே, பெரிய நகரங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பணிபுரிய பலர் அதிகாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக அதிகாரிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால், கடந்த ஆட்சிக்காலத்தில் பெரிய அலுவலகங்களில் பணிபுரிய பல ேகாடி வரை பணம் ைகமாறி டிரான்ஸ்பர் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் சார்பதிவாளர்கள் பணிமாறுதலில் புதிய நடைமுறை கொண்டு வர அமைச்சர் மூர்த்தி, ஐஜி சிவன் அருளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில், அ, ஆ இ என வகைப்படுத்தப்பட்டு இந்த அலுவலகங்களில் சார்பதிவாளர்கள் பணிமாறுதல் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதாவது அதிக வருவாய் வரும் அலுவலகங்களில் ஒரு ஆண்டு, நடுத்தரமாக வருவாய் வரும் இடங்களில் 2 ஆண்டு, குறைவான வருவாய் வரும் இடங்களில் 3 ஆண்டுகள் வரை பணியமர்த்தப்படவுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் உள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் வருவாய் வாரியாக பிரித்து ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அதிக வருவாய் வரும் அலுவலகத்தில் முதல் இடம் திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகம், 2வது இடம் குன்றத்தூர், 3வது இடம் அம்பத்தூர், 4வது இடம் சென்னை தெற்கு இணை 1ம் எண் அலுவலகம், 5வது இடம் சேலையூர், 6வது இடம் கூடுவாஞ்சேரி, 7வது இடம் ஓசூர், 8வது இடம் காந்திபுரம், 9வது இடம் நீலாங்கரை, 10வது இடம் செங்கல்பட்டு இணை2ம் எண் சார்பதிவாளர் அலுவலகங்கள் பிடித்துள்ளது.
அதே நேரத்தில் சென்னை மற்றும் புறநகரில் உள்ள பல்லாவரம் 11வது இடம், ஆவடி 14வது இடம், விருகம்பாக்கம் 16வது இடம், தாம்பரம் 17வது இடம், பம்மல் 18வது இடம், திருவள்ளூர் 20வது இடம் செங்குன்றம் 21வது இடத்தை பிடித்துள்ளது. அதேநேரத்தில் கடைசியாக சிதம்பரம் அருகே குமரச்சி 575வது இடத்தையும், காரைக்குடி அருகே மீமீசல் 574வது இடம், கடலாடி 573வது இடத்தை பிடித்துள்ளது. இந்த அலுவலகங்களில் இனி வருங்காலங்களில் பணிமாறுதலில் புதிய நடைமுறைப்படி சார்பதிவாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
சிறப்பு மின்சார ரயில்கள் ரத்து
படத்தில் அரசியல் வசனங்கள் இயக்குனரிடம் அஜித் மறுப்பு
டிமாண்டி காலனி 2ம் பாகத்தில் அருள்நிதி
தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் ரூ.53 கோடியில் பணிகள் மேற்கொள்ள தீர்மானம்: துணை மேயர் தகவல்
திருமணமான ஒன்றரை ஆண்டில் புதுப்பெண் தற்கொலை: போலீசில் தந்தை புகார்
கர்நாடகத்தில் இருந்து ஒரத்தநாடு திருமண விழாவிற்கு வந்த 3.6 டன் அழுகிய இறைச்சி பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை