SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேட்டிங், பந்துவீச்சில் தைரியத்துடன் செயல்படவில்லை: கேப்டன் விராட் கோஹ்லி பேட்டி

2021-11-01@ 14:58:58

துபாய்: உலக கோப்பை டி.20 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 குரூப் 2 பிரிவில் துபாயில் நேற்றிரவு நடந்த போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வழக்கம்போல் தடுமாறியது. வழக்கத்திற்கு மாறாக ரோகித்சர்மாவுக்கு பதில் தொடக்க வீரராக களம் இறங்கிய இஷான் கிஷன் 8 பந்தில் 4 ரன் எடுத்து ஆட்டம் இழந்து சரிவை தொடங்கி வைத்தார். அடுத்து வந்த ரோகித்சர்மா முதல் பந்திலேயே கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய நிலையில் 14 ரன்னிலும், கே.எல்.ராகுல் 18, கோஹ்லி 9, ரிஷப்பன்ட் 12, பாண்டியா 23 ரன்னிலும், தாகூர் டக்அவுட்டும் ஆகினர்.

20 ஓவரில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களே எடுத்தது. ஜடேஜா 26 (19பந்து) ரன்னில் களத்தில் இருந்தார். நியூசிலாந்து பந்துவீச்சில், டிரெண்ட் போல்ட் 3, இஷ் சோதி 3 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் குப்தில் 20(17பந்து), டேரில் மிட்செல் 35 பந்தில் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 49 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். 14.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன் எடுத்த நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. வில்லியம்சன் நாட்அவுட்டாக 33 ரன் அடித்தார்.

ரோகித்  சர்மா, கோஹ்லி விக்கெட்டை எடுத்த இஷ்சோதி ஆட்டநாயகன் விருது பெற்றார். முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த நியூசிலாந்து நேற்று முதல் வெற்றியை பெற்றது. அடுத்தடுத்து 2 தோல்வியை சந்தித்த இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட மங்கியது. ஐசிசி தொடர்களில் நியூசிலாந்திடம் தோல்வி இந்தியாவின் தொடர்கதையாகி வருகிறது. தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோஹ்லி கூறுகையில், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நாங்கள் போதுமான அளவுக்கு தைரியமாக செயல்படவில்லை.

இதேபோல் பீல்டிங்குக்கு களம் இறங்கியபோது வீரர்களிடம் போதுமான உத்வேகம், துணிச்சல் இல்லை. ஆனால் எங்களை விட நியூசிலாந்து வீரர்கள் தீவிரத்துடன் செயல்பட்டனர். இந்திய அணிக்காக விளையாடும்போது நிறைய எதிர்பார்ப்புகள், நெருக்கடிகள் எப்போதும் இருக்கும். அதை சமாளித்து தான் விளையாட வேண்டும். ஒவ்வொரு முறை வாய்ப்பு கிடைத்தபோதும் விக்கெட்டை இழந்தோம். ஒரு ஷாட்டுக்கு செல்லலாமா வேண்டாமா என்ற தயக்கத்தின் விளைவாக இது பெரும்பாலும் ஏற்படுகிறது என்றார்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • ooty_flower

  பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

 • bharat111

  சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

 • charles_kameela

  3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

 • arungatchimmaa1

  சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

 • porkappal1

  முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்