நூல் விலை கிலோவுக்கு ரூ.50 அதிகரித்துள்ளதால் திருப்பூர் பின்னலாடைத்துறையினர் அதிர்ச்சி
2021-11-01@ 14:33:31

திருப்பூர்: நூல் விலை கிலோவுக்கு ரூ.50 அதிகரித்துள்ளதால் திருப்பூர் பின்னலாடைத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை இல்லாத வகையில் நூல் விலை கிலோவுக்கு ரூ.50 உயர்ந்துள்ளதாக பின்னலாடைத்துறையினர் கவலை அடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்குக்கு பின் ஆர்டர்கள் வர தொடங்கி உள்ள நிலையில் நூல் விலை உயர்வு அதிர்ச்சியளிப்பதாக தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து பெற்ற ஆர்டர்களை முடித்து கொடுக்கும் போது பின்னலாடை உற்பத்தி நிலையங்கள் இழப்பை சந்திக்கும். ஒரு கிலோ நூலில் 4 பனியன்கள் தயாரிக்கலாம் எனும் நிலையில், நூல் விலை உயர்வு காரணமாக பனியன் ஒன்றின் விலை ரூ.15 வரை அதிகரிக்கும்.
நூல் வர்த்தகம் ஏற்றுமதி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் ரூ.300ஆக இருந்த ஒரு கிலோ நூல் விலை தற்போது ரூ.350ஆக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் ரூ.20 ஒரே முறையாக அதிகமானது. அதன்பிறகு 50 ரூபாய் விலை உயர்வு என்பது மிகவும் அதிகமாகும். இதற்கு மூலகாரணமாக பருத்தியின் விலை அதிகமானதே ஆகும். இதனால் ஆடைகள் விலை உயரும்.
இதுவரை விலை உயர்ந்தது ரூ.5 முதல் ரூ.10 வரை என்ற அளவில் இருக்கும். தற்போது ரூ.50 ஒரே நேரத்தில் அதிகரித்துள்ளனர். ஏற்றுமதி ஆர்டர்கள் 3 மாதம், 4 மாதங்களுக்கு முன்னதாக மாதிரி காண்பிக்கப்பட்டு ஆர்டர்கள் எடுக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில் இந்த விலை உயர்வு பனியன் நிறுவனங்களை முற்றிலும் பாதிக்கும். பருத்தியின் உற்பத்தி செலவுக்கு ஏற்ப விலை உயர்வது வழக்கம். ஆனால் இந்த முறை அந்த விகிதாசாரத்தின் அடிப்படையில் விலை உயர்ந்ததாக தெரியவில்லை என்று பனியன் நிறுவன உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு பிறகு ரூ.5 - 10 வரை விலை உயர்ந்தது. நூல் கிடைக்காத தட்டுப்பாடு நிலை இருந்தது. உரிமையாளர்கள் நிர்ணயித்த விலையை விட ஏஜெண்டுகளிடம் கூடுதலாக விலை கொடுத்து வாங்கும் சூழல் இருந்தது. நூல் வரத்து சரியான பிறகு திடீரென ரூ.50 விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
‘வளமான ஆலந்தூர்’ செயலி அறிமுகம்
ரூ.5.8 கோடி மதிப்பீட்டில் சமத்துவபுரம் வீடுகள் மறுசீரமைக்கும் பணி: அமைச்சர் நாசர் அடிக்கல் நாட்டினார்
திடீர் தீ விபத்தில் 3 கடைகள் நாசம்
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மழைநீர் கால்வாய் சீரமைப்பு பணி: நகர்மன்ற தலைவர் ஆய்வு
கும்மிடிப்பூண்டி பகுதியில் பழுதடைந்த மின்கம்பங்களை அகற்ற மக்கள் வலியுறுத்தல்
விபத்தில் 3 பேர் பரிதாப பலி
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்