நீட் மோசடி கும்பலுடன் 25 மாணவர்கள் தொடர்பு தேர்வு முடிவை நிறுத்த கோரிக்கை: உபி.யில் அதிரடி திருப்பம்
2021-11-01@ 01:30:09

லக்னோ: நீட் தேர்வு மோசடி கும்பலுடன் தொடர்புடைய 25 மாணவர்களின் தேர்வு முடிவை நிறுத்தி வைக்கும்படி, தேசிய தேர்வு முகமையிடம் உபி போலீசார் வலியுறுத்தி உள்ளனர். மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது. இதில், சில வடமாநிலங்களில் ஆள்மாற்ற மோசடிகள் நடப்பது கண்டறியப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக பல் மருத்துவம் 2ம் ஆண்டு படிக்கும் மாணவி மற்றும் அவரது தாயாரை போலீசார் கைது செய்தனர். திரிபுராவை சேர்ந்த ஒருவரின் மகனுக்காக, ஆள்மாறாட்டம் செய்து அந்த மாணவி தேர்வை எழுதி உள்ளார். இதற்காக அவருக்கு ரூ.5 லட்சம் பணம் தரப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் ஒரே கும்பல் செயல்படுவதை போலீசார் விசாரணையில் கண்டறிந்தனர். கடந்த ஓரிரு ஆண்டுகளில் நன்கு படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஏழை மாணவ, மாணவிகளை குறிவைத்து அவர்களுக்கு பணத்தாசை காட்டி, ஆள்மாற்றாட்டம் செய்து தேர்வு எழுத வைத்துள்ளனர்.
அந்த கும்பலின் தலைவன், பீகார் மாநிலம், பாட்னாவை சேர்ந்த பிரேம் குமார் என்பவனை வாரணாசி போலீசார் கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் தற்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்கள் ஒரு மாணவனுக்கு மட்டும் ஆள்மாறாட்டம் செய்யவில்லை. உபி.யிலேயே 25 மாணவர்கள் இந்த மோசடியில் சம்மந்தப்பட்டு இருப்பதான வலுவான ஆதாரங்கள் தற்போது சிக்கி உள்ளன. அவர்களின் விவரங்கள் அனைத்தையும், தேசிய தேர்வு முகமைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
அவர்களின் நீட் தேர்வு முடிவை மட்டும் நிறுத்தி வைக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். மேலும், இந்த கும்பல் வெளிமாநிலங்களில் எங்கெல்லாம் கைவரிசை காட்டியிருக்கிறது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடக்கிறது.
ராஜஸ்தானில் பலே கும்பல்
உபி.யை போலவே ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் ஆள்மாற்றம் செய்து நீட் தேர்வு எழுதியதாக ஒரு கும்பல் கடந்த செப்டம்பரில் கைதானது. நாக்பூரை சேர்ந்த நீட் பயிற்சி மையம் நடத்தும் உரிமையாளரே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத, ஒரு மாணவனுக்கு ரூ.50 லட்சம் வரை பணம் வாங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த கும்பலுக்கும் உபி கும்பலுக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணையை முடுக்கி உள்ளனர்.
மேலும் செய்திகள்
வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை ஷாரூக் மகன் ஆர்யன் கான் நிரபராதி: தேசிய போதை பொருள் தடுப்பு துறை தகவல்
கியூட் நுழைவுத் தேர்வை ஏற்க ஒன்றிய பல்கலை.கள் தயக்கம்: யுஜிசி அதிருப்தி
பேத்திக்கு பாலியல் தொல்லை தந்ததாக மருமகள் குற்றச்சாட்டு அவமானம் தாங்காமல் மாஜி அமைச்சர் மக்கள் முன்னிலையில் சுட்டு தற்கொலை: உத்தரகாண்ட்டில் பரபரப்பு
இந்திய எழுத்தாளருக்கு சர்வதேச புக்கர் விருது
ஆற்றில் வாகனம் கவிழ்ந்து 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: லடாக்கில் சோகம்
அரசு நிர்வாகத்தில் கடந்த ஆட்சியாளர்கள் தொழில்நுட்பத்தை புகுத்தாததால் ஏழை, நடுத்தர மக்களுக்கு பாதிப்பு: டிரோன் திருவிழாவில் பிரதமர் குற்றச்சாட்டு
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!