பாதுகாப்பான தூரத்தில் வைத்து பட்டாசு வெடிக்காவிட்டால் கண்களில் பாதிப்பு: அகர்வால்ஸ் கண் மருத்துவமனை டாக்டர் ஆர்.கலாவதி தகவல்
2021-11-01@ 01:00:35

சென்னை: பாதுகாப்பான தூரத்தில் எச்சரிக்கையுடன் பட்டாசுகளை வெடிக்காவிட்டால், அதில் உள்ள ரசாயனங்களால் கண்கள் கடுமையாக பாதிக்கும் வாய்ப்பு உள்ளது என்று டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை முதுநிலை கண் மருத்துவர் டாக்டர் ஆர்.கலாதேவி கூறினார். இதுகுறித்து மருத்துவ சேவைகள் பிரிவின் மண்டல தலைவரும், முதுநிலை கண் மருத்துவருமான டாக்டர் கலாதேவி கூறியதாவது: தீபாவளி திருவிழாவின்போது உயிரிழப்பு மற்றும் ஆயிரக்கணக்கானோருக்கு உடல், கண்களில் தீக்காயங்கள் மற்றும் சுவாசப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஒருவருக்கு கண்களில் காயம் ஏற்படும்போது, அவர் ஒருபோதும் கண்களை கசக்கக்கூடாது. கண்களுக்கு ஒத்தடம் போன்ற அழுத்தத்தையும் தரக்கூடாது.
மேலும், கண்களில் தண்ணீர் ஊற்றி அலசுவது இன்னும் அதிக ஆபத்தானது. அதை தவிர்க்க வேண்டும். தூய்மையான நீரில் கண்களை மூழ்கச் செய்வது அல்லது தொடர்ச்சியாக தண்ணீர் மூலம் கழுவுவதே சிறந்த முதலுதவியாக இருக்கும். சுயமாக கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். காயங்களுக்கு சிகிச்சை பெற கண் மருத்துவர்களிடம் உடனே சென்று சிகிச்சை பெற வேண்டும். எனவே பட்டாசுகள் மற்றும் பிற வெடிகளை கையாளும் நபர்கள், கண்களை பாதுகாக்கின்ற கண்ணாடிகளை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.
குறைந்தது 3 அடி தூரத்தில் பட்டாசுகளை கொளுத்த வேண்டும், வேடிக்கை பார்க்கும் நபர்கள் யாராக இருப்பினும் குறைந்தது 5 மீட்டர்கள் இடைவெளியைப் பராமரிக்க வேண்டும். பட்டாசுகளை வெடிக்கும் போது கான்டாக்ட் லென்ஸ்களை அகற்றிவிடுவதும், வழக்கமான கண் கண்ணாடிகளைப் பயன்படுத்துவதும் நல்லது. மேலும் கண்களில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் அவசர அழைப்பான 044-4300 8800 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
மேலும் செய்திகள்
காவல்துறை நம் நண்பன் என்று சொல்லும் வகையில் காவலர்கள் செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
ஆவடி ரயில்வே ஸ்டேஷன் அருகே சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க கோரிக்கை
தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் முன்னிலையில் Pacedigitek என்ற நிறுவனத்துடன் முதன்மைச் சேவை ஒப்பந்தங்கள் கையெழுத்து
சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை..!
தமிழகத்தில் காடுகளின் பரப்பளவை 33%ஆக உயர்த்த நடவடிக்கை: வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தகவல்..!
தமிழகத்தில் ஓராண்டில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!