ராமநாதபுரம் அருகே பறவைகள் வேட்டை துப்பாக்கி பறிமுதல்-மூன்று பேர் சிக்கினர்
2021-10-29@ 14:12:28

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே வனப்பகுதிகளில் பறவைகளை சிலர் வேட்டையாடுவதாக வன சரகர் வெங்கடேஷுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி வனவர் ராஜசேகர், வனக்காப்பாளர்கள் முத்துக்குமார், கார்த்திக் ராஜா செல்வராகவன் ரோந்து மேற்கொண்டனர். அப்போது அங்கு 3 பேர் கையில் பையுடன் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சித்தார் கோட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த முஹமது இஸ்மாயில்(40), அப்துல் சத்தார்(35), புஹாரி அஸ்மத் அலி(31) ஆகியோர் எனவும், பறவையினங்களை இறைச்சிக்காக வேட்டையாடியது தெரிந்தது.
அவர்களிடமிருந்து, மாங்குயில் 2, சின்னான் 1, குயில் 6, கரும் சிவப்பு வால் ஈ பிடிப்பான் 4, புள்ளி புறா 3, அரசவால் ஈ பிடிப்பான் 2, செம்மார்பு குக்குருவன் 1, தோட்ட கள்ளன் 2, நீல கொண்டை ஈ பிடிப்பான் 1, நீல முக செண்பகம் 1 என 23 பறவைகளை இறந்த நிலையில் பறிமுதல் செய்தனர். மேலும் வேட்டையாட பயன்படுத்திய 4 அடி உயர துப்பாக்கியையும் (ஏர் கன்) பறிமுதல், 10 கிராம் எடை கொண்ட 26 குண்டுகளை பறிமுதல் செய்தனர். இதனால் 3 பேருக்கும் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
ராமேஸ்வரம் மீனவ பெண் கொலையில் ஒடிசா இளைஞர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
அதிமுக ஆட்சியில் முறைகேடாக நியமிக்கப்பட்டதாக புகார் 10ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் சமர்ப்பிக்காத ஊராட்சி செயலர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது: மே 20ம் தேதியுடன் கெடு முடிந்ததாக அதிகாரிகள் தகவல்
குறுவை சாகுபடிக்காக கல்லணையில் தண்ணீர் திறப்பு
புதிய கல்விக் கொள்கை மூலம் பாரம்பரிய பண்புகளை மீட்கலாம்: தேசிய கருத்தரங்கில் கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
சூறைக்காற்றுடன் கனமழை கடலூரில் 2 லட்சம் வாழை மரங்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
மதுரையில் ஆவணம் இன்றி யானை வளர்த்த நபர்... போராடி மீட்ட வனத்துறை: திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பு
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!