தீபாவளி நெருங்குவதால் சந்தையில் பந்தய சேவல் விற்பனை விறுவிறுப்பு-கூடுதல் விலைக்கு ஏலம்
2021-10-29@ 12:19:36

பொள்ளாச்சி : பொள்ளாச்சி வார சந்தையில் நேற்று, பந்தய சேவல் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் கூடுதல் விலைக்கு விற்பனையானது.பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டின் ஒருபகுதியில், வியாழக்கிழமைதோறும் வாரச்சந்தை நடக்கிறது. அப்போது ஆனைமலை, கோட்டூர், நெகமம், வேட்டைக்காரன்புதூர், கோமங்கலம், வடக்கிபாளையம் மற்றும் உடுமலை, கனியூர், மடத்துக்குளம், பழனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும், பந்தய சேவல்(கட்டுச்சேவல்) விற்பனையும் நடக்கிறது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்குவதால், நேற்று நடந்த ஏலநாளில் சுற்றுவட்டார கிராமங்களிலில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர், பந்தய சேவலை விற்பதற்காக அதிகளவில் கொண்டு வந்திருந்தனர். பந்தய சேவலை வாங்க அதிகாலை முதலே சந்தையில் கூட்டம் அதிகமாக இருந்தது.
சந்தைக்கு கொண்டுவரப்பட்ட பந்தய சேவலை, சுற்றுவட்டார கிராம பகுதியிலிருந்தும். பழனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்தும் வந்த பலர் குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து வாங்கி சென்றனர்.இதனால் எப்போதும் இல்லாத அளவிற்கு, நேற்று பந்தய சேவல் விற்பனை விறுவிறுப்புடன் நடந்தது. பந்தய சேவல் ஒன்று ரூ.1500 முதல் ரூ.5ஆயிரம் வரை என தரத்திற்கேற்ப விலைபோனது.
மேலும் செய்திகள்
மாமல்லபுரம் கடற்கரையில் மனைவியுடன் நடந்து சென்றவர் மயங்கி பலி
சிசு உயிரிழப்பை பூஜ்யநிலைக்கு கொண்டுவர வலியுறுத்தல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
விழுப்புரம் அருகே அங்கன்வாடி மையத்தில் சத்துமாவு கஞ்சி சாப்பிட 29 பேர் மயக்கம்: திண்டிவனம் ஆட்சியர் நேரில் ஆய்வு
உஸ்ஸ்ஸ்... அப்பாடா.... அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவு
கோவையில் கார் மீது வேன் மோதிய கோர விபத்தில் 4 வயது சிறுவன் பரிதாப பலி!: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு..!!
நாகை அருகே கழிவுநீர் கலந்த நீரை குடித்ததால் 10-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!