செய்யூர் மற்றும் மதுராந்தகம் தொகுதியில் புதிய மின்மாற்றிகள் இயக்கம்: எம்எல்ஏ பாபு துவங்கி வைத்தார்
2021-10-29@ 00:16:06

செய்யூர்: செய்யூர் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் மின்வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றிகள் செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு திறந்து வைத்தார். மின்தடையில்லா தமிழகம் என்ற திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பல கோடி மதிப்பில் மின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் அச்சிறுப்பாக்கம் மின் கோட்டம், செய்யூர் தொகுதிக்கு உட்பட்ட சூனாம்பேடு, கெங்கதேவன் குப்பம், மடையம்பாக்கம், மேல்மருவத்தூர், அம்பேத்கார் காலனி, வன்னியநல்லூர், தேன்பாக்கம், மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட சோத்துபாக்கம், காந்தி நகர் ஆகிய 9 கிராம பகுதிகளில் கடந்த 10ஆண்டு காலமாக குறைந்த மின்னழுத்த பிரச்னை இருந்து வந்தது.
இக்கிராம மக்களின் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.4 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கியது. இதனை தொடர்ந்து, மின்வாரியம் சார்பில் 25 கே.வி.எ. கொண்ட 9 புதிய மின்மாற்றிகள் அந்தந்த கிராம பகுதியில் அமைப்பட்டது. மின்மாற்றிகள் செயல்பாட்டு தொடக்க நிகழ்ச்சியை செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு நேற்று கலந்துகொண்டு புதிய மின்மாற்றி செயல்பாட்டை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் சிற்றரசு, மாவட்ட கவுன்சிலர் சாந்தி ரவிகுமார், ஒன்றிய கவுன்சிலர் ஜீவா பூலோகம், சூனாம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், துணை தலைவர் விஜியா தெய்வசிகாமணி, வன்னியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ், காவனூர் வரதராஜன், அச்சிறுப்பாக்கம் மின்வாரிய செயற்பொறியாளர்கள் கிறிஸ்டோபர் லியோராஜ், கிருபானந்தன், உதவி செயற்பொறியாளர்கள் தனசேகரன், மகேஸ்வரன், துரைராஜ் மற்றும் பிரிவு பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Tags:
Seiyur Madurantakam constituency New Transformers Movement MLA Babu செய்யூர் மதுராந்தகம் தொகுதி புதிய மின்மாற்றிகள் இயக்கம் எம்எல்ஏ பாபுமேலும் செய்திகள்
100 நாள் வேலைவாய்ப்பு திட்ட நிதி ஒதுக்கீட்டை குறைத்த ஒன்றிய அரசை கண்டித்து மார்ச் 7ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: முத்தரசன் அறிவிப்பு
அனுமதியின்றி அதிமுகவினர் கூட்டம்: ஈரோடு மண்டபத்துக்கு சீல்
புதுச்சேரி சாராயக்கடைக்கு செல்ல ஆற்றில் செம்மண் சாலை அமைப்பு: பள்ளம் தோண்டி தடுத்த போலீஸ்
மதுரை வழியாக செல்லும் 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் 15ம் தேதி வரை ரத்து
தென்காசி சங்கரநாராயணசுவாமி கோயிலில் அமைச்சர் சேகர் பாபு இன்று திடீர் ஆய்வு
ராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளில் இதுவரை 20 கிலோ தங்கம் மீட்பு: கடலோர காவல் படை நடவடிக்கை
பறவை காய்ச்சலால் 585 கடல் சிங்கம், 55,000 பறவைகள் பலி: பெரு நாட்டில் சோகம்..!
மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!
வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்