SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்று 30 காசு அதிகரிப்பு: சென்னையில் பெட்ரோல் விலை 105 தாண்டியது

2021-10-28@ 15:41:25

சென்னை: பெட்ரோல், டீசல் விலை இன்று முறையே 30, 34 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று 105ஐ தாண்டியது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் 87 டாலரை தாண்டி உள்ளது. இதனால் இந்தியாவில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. 2 நாட்கள் இடை வெளிக்கு பின் நேற்று நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. இன்றும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால், சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 104.83க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 30 காசுகள் அதிகரித்து 105.13க்கும், டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து 101.25க்கும் விற்பனையாகிறது. தமிழகத்தின் பிற பகுதிகளில் கடந்த வாரமே பெட்ரோல் விலை 105 தாண்டிய நிலையில் இன்று சென்னையிலும் அதனை தாண்டி உள்ளது. சேலத்தில் இன்று பெட்ரோல் 30 காசு அதிகரித்து 105.45க்கும், டீசல் 34 காசு அதிகரித்து 101.60க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

''ம.பி.யில் ரூ.120''
மத்திய பிரதேசத்தில் அனுப்பூர் மாவட்டம் உட்பட ஒரு சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.120ஐ கடந்தது. டீசல் ரூ.110ஐ நெருங்கிவிட்டது. சட்டீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா மாநில எல்லைகளை ஒட்டிய பலகாட் மாவட்டத்தில் பெட்ரோல் ரூ.119.23 ஆக உள்ளது. இந்த கடும் விலை உயர்வுக்கான காரணம் குறித்து அனுப்பூர் மாவட்டம் பிஜூரி நகரில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர் அபிஷேக் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘‘அனுப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெட்ரோல் விலை 36 பைசா அதிகரித்து லிட்டர் ரூ.120.4 பைசாவாகி உள்ளது. டீசல் விலை 37 காசுகள் அதிகரித்து ரூ.109.17 ஆக உள்ளது. அனுப்பூர் மாவட்டத்துக்கு சுமார் 250 கி.மீ. தொலைவில் உள்ள ஜபல்பூர் எண்ணெய் கிடங்கில் இருந்து பெட்ரோல் வருகிறது. இதனால், மற்ற பகுதிகளைவிட இங்கு பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது’’ என்றார்.

அதேநேரம், தலைநகர் போபாலில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.116.62 ஆகவும், டீசல் ரூ.106.01 ஆகவும் உள்ளது. மகாராஷ்டிரா, சட்டீஸ்கர் ஆகிய அண்டை மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைவாக இருப்பதால் அந்த மாநில எல்லைகளை ஒட்டி இருப்பவர்கள், அங்கு சென்று வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டு கொள்வதால் விற்பனை பாதிக்கப்படுவதாக பெட்ரோல் பங்க உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • burundi-fire-8

    புரூண்டி நாட்டில் சிறையில் பயங்கர தீ விபத்து: 38 கைதிகள் தீயில் கருதி உயிரிழப்பு

  • pain-kill

    வலியின்றி தற்கொலை செய்துகொள்ள வந்துவிட்டது Sarco Capsule எந்திரம்!: ஒரு நிமிடத்தில் உயிரை பறிக்குமாம்..!!

  • Army_helicopter_crash_Coonoor

    குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்

  • tomato01

    பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கிலோ 73 ரூபாய்க்கு விற்பனை

  • vaikundaa1

    பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 5ம் திருநாள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்