SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேனி அருகே கோயிலில் திருடுபோன சுவாமி சிலைகள் மீட்பு

2021-10-28@ 15:34:09

* 24 மணிநேரத்தில் போலீசார் அதிரடி * ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை

தேனி: தேனி அருகே தட்சிணாமூர்த்தி கோயிலில் சிலைகளை திருடியவரை 24 மணிநேரத்தில் போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை ேதடி வருகின்றனர்.தேனி அருகே அரண்மனைபுதூர், முல்லைநகரில் தட்சிணாமூர்த்தி கோயிலில் நேற்று முன்தினம் ஐம்பொன்னாலான 9 சிலைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் பழனிச்செட்டிபட்டி போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், ஒரு அடி உயரம் உள்ள வேதவியாசகர் சிலை மற்றும் ஒரு பீடம் கீழே கிடந்ததை கண்டுபிடித்து அதனை மீட்டனர். எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவுப்படி, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேலும் முடுக்கி விடப்பட்டன. நேற்று இச்சிலை திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்த போலீசார், திருடு போன சிலைகளை மீட்டனர்.

எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரே கூறுகையில், ‘‘கோயில் திருட்டு சம்பந்தமாக 4 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடினோம். இதில் பெரியகுளம் வடகரை மில்லர் தெருவை சேர்ந்த தர் (24) மீது சந்தேகம் வந்தது. இந்த வாலிபர் மீது ஏற்கனவே சிலை கடத்தல், திருட்டு, அடிதடி, ஆயுத வழக்குகள் என திருப்பூர் மாவட்டம் அன்னூர், தூத்துக்குடி தெற்கு போலீஸ் நிலையங்களில் 9 வழக்குகள் உள்ளன. 10 நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தவர் மாயமாகி இருந்தார். தனிப்படையினர் பெரியகுளம் கும்பக்கரை ரோட்டில் பதுங்கியிருந்த தரை பிடித்து விசாரித்ததில் சிலைகளை திருடியதை ஒப்புக் கொண்டார்.

திருட்டுக்கு துணையாக இருந்த பெரியகுளம் அழகர்சாமிபுரத்தை சேர்ந்த கார்த்திக் (24) தலைமறைவாக உள்ளார். அவரை தீவிரமாக தேடி வருகிறோம். ரூ.20 லட்சம் மதிப்புள்ள திருடுபோன அனைத்து சிலைகளும் மீட்கப்பட்டுள்ளன’’என்றார். கோயில் சிலைகளை திருடி விற்க முயன்ற தருக்கும், சிலை கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என நீதிமன்ற அனுமதி பெற்று தரை விசாரிக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சிலைகள் திருடு போன 24 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து திருடு போன சிலைகளையும் மீட்ட போலீசாரை, எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரே பாராட்டினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • burundi-fire-8

  புரூண்டி நாட்டில் சிறையில் பயங்கர தீ விபத்து: 38 கைதிகள் தீயில் கருதி உயிரிழப்பு

 • pain-kill

  வலியின்றி தற்கொலை செய்துகொள்ள வந்துவிட்டது Sarco Capsule எந்திரம்!: ஒரு நிமிடத்தில் உயிரை பறிக்குமாம்..!!

 • Army_helicopter_crash_Coonoor

  குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்

 • tomato01

  பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கிலோ 73 ரூபாய்க்கு விற்பனை

 • vaikundaa1

  பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 5ம் திருநாள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்