SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமரியில் நவம்பர் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு நாகர்கோவில் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிப்பு

2021-10-28@ 15:30:35

நாகர்கோவில்: குமரியில் நவம்பர் 2ம் ேததி பள்ளிகள் திறப்பதையொட்டி நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது.   கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா தொற்று குறைந்த நிலையில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிகள் திறந்தது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை வருகிற நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தது. குமரி மாவட்டத்திற்கு 1ம் தேதி உள்ளூர் விடுமுறை என்பதால், 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது.

  நாகர்கோவில் மாநகர பகுதியில் அதிக அளவில் தனியார், அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. மேலும் பள்ளி திறப்பதையொட்டி தற்போது கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்கும் வகையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அரசு பள்ளிகளை சுற்றியுள்ள புதர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். இது குறித்து மாநகர் நல அதிகாரி விஜயசந்திரன் கூறியதாவது: நாகர்கோவில் மாநகர பகுதியில் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள் 28 உள்ளன. இந்த பள்ளிகளில் முதற்கட்டமாக கொசு மருந்துகள் தெளிக்கப்பட்டது.

 இந்நிலையில் நவம்பர் 2ம் தேதி 1ம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை வகுப்புகள் தொடங்க உள்ளதால், கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்கும் வகையில் வகுப்பு அறை, பள்ளி வளாகம், பள்ளியின் கேட் உள்பட அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி அடிக்கப்படுகிறது. மேலும் பள்ளிகளை சுற்றி இருக்கும் புதர்கள் அகற்றப்பட்டு வருகிறது. பாம்பு உள்ளிட்ட விஷஜந்துகள் இருப்பதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறப்பதற்கு இரு நாட்களுக்கு முன்பு பள்ளிகளை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளதா என ஆய்வு செய்து டெங்கு தடுப்பு பணி மேற்கொள்ளப்படும்.

 அனைத்து பள்ளிகளில் இருமுறை கொரோனா கிருமிநாசினி தெளிக்கவும், டெங்கு கொசு தடுப்பு பணி மேற்கொள்ளவும் மாநகராட்சி ஆணையர் அறிவுரை வழங்கியுள்ளார். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ேமலும் தனியார் பள்ளிகளில் கொரோனா தடுப்பு பணி மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. தனியார் பள்ளி நிர்வாகம் மாநகராட்சியிடம் உதவி கேட்டால், மாநகராட்சி சார்பில் கொசு ஒழிப்பு மருந்து அடிப்பது, கொரோனா தடுப்பு கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • burundi-fire-8

    புரூண்டி நாட்டில் சிறையில் பயங்கர தீ விபத்து: 38 கைதிகள் தீயில் கருதி உயிரிழப்பு

  • pain-kill

    வலியின்றி தற்கொலை செய்துகொள்ள வந்துவிட்டது Sarco Capsule எந்திரம்!: ஒரு நிமிடத்தில் உயிரை பறிக்குமாம்..!!

  • Army_helicopter_crash_Coonoor

    குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்

  • tomato01

    பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கிலோ 73 ரூபாய்க்கு விற்பனை

  • vaikundaa1

    பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 5ம் திருநாள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்