SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீன்பிடித் துறைமுகத்திற்கு கருங்கற்கள் ஏற்றிவந்த லாரி பள்ளத்தில் சிக்கியது: பெரும் சேதம் தவிர்ப்பு

2021-10-28@ 15:30:12

மயிலாடுதுறை: மீன்பிடி துறைகத்திற்கு கற்கள் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் சிக்கியது.நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மீன்பிடித்துறை முகங்கள் பூம்புகார், தரங்கம்பாடி மற்றும் ஆறுகாட்டுத்துறை போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழக மீன்வளத்துறையினர் இதற்கான வேலையை செய்து வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து கருங்கற்களை லாரிகள் மூலம் ஏற்றிச்சென்று ஆறுகாட்டுத்துறை துறைமுகத்தில் கொட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை பெரம்பலூரிலிருந்து 30 டன் கருங்கற்களை ஏற்றிய லாரி ஒன்று ஆறுகாட்டுத்துறை செல்வதற்காக மயிலாடுதுறை மன்னம்பந்தல் வழியாக சென்றது. மன்னம்பந்தலை தாண்டி சென்று கொண்டிருந்தபோது விளநகர் என்ற இடத்தில் முன்னே சென்ற வாகனத்தை லாரி முந்திச்செல்ல முயன்றது. அப்போது அந்த வாகனம் இடம் கொடுக்காததால் 30 டன் எடையுடன் லாரி சாலையோரம் இழுத்துச்சென்று இறங்கி மண்ணில் சிக்கிக்கொண்டது.

வேகம் குறைவாக இருந்ததால் வாகனம் சாய்விலிருந்து தப்பியது. விடியற்காலை 3 மணி என்பதால் ஆள்நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் இல்லாததால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. லாரி அதிக அளவு எடையுடன் சாலை ஓரத்தில் இருந்ததால் மீண்டும் சாலைக்குக் கொண்டுவர இயலவில்லை. உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது, அவர்கள் வந்து பார்த்தும் வாகனத்தை 30 டன் கருங்கல் எடையடன் மீட்க முடியவில்லை. நேற்று ஒப்பந்ததாரர்கள் வாகனத்திலிருந்து கருங்கற்களை பொக்லின் எந்திரம் மூலம் கீழே இறக்கிவிட்டு லாரியை காலியாக்கிய பிறகு சாலையில் நிறுத்தி, அதன்பிறகு இரண்டு லாரிகளில் கருங்கற்களை ஏற்றி ஆறுகாட்டுத்துறைக்கு எடுத்துச் சென்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bulgaria-24

    பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

  • murasoli-23

    ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

  • selem-gas-23

    சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

  • andhra-flood-22

    ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

  • tajmahal-love

    தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்