SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் நலம் காக்க குழு அமைத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

2021-10-28@ 15:29:25

சென்னை: மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் நலன் காக்க ஆலோசனை குழுவை அமைத்து அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இலங்கை தமிழர்கள் மேம்பட்ட வாழ்க்கைத்தரம், உரிமைகளை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களின் நலனை காக்க கடந்த ஆகஸ்டு 27ம் தேதி சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார்.

இந்த அறிவிப்பின் படி ஆலோசனை குழு முகாம்களின் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் கல்வி, சமூக பாதுகாப்பிற்கு வழிவகை செய்தல், குடியுரிமை மற்றும் இலங்கைக்கு செல்ல விருப்பம் ஆகிய அம்சங்சளை உள்ளடக்கி ஆலோசனை குழு செயல்படும் என்று இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் 20 பேர் கொண்ட குழு உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் இலங்கை தமிழர்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்துவதற்கான கல்வி, சமூக பாதுகாப்பு பலன்கள், குறைகளை களைவது, திறன் மேம்பட்டு வளர்ச்சி திட்டம் மற்றும் வேலை வாய்ப்பு குறித்த தனி நபர் உதவிக்கும் இந்த குழுவானது வழிவகை செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குடியுரிமை பொறுத்தவரை இலங்கைக்கு செல்ல விருப்பப்பட்டால் அவர்களுக்கான தீர்வுகள் சட்டபூர்வமாக எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கும் இந்த குழு அதற்க்கான வழிவகைகளை செய்யும் எனவும் தமிழக அரசு வெளியிட்டிருக்க கூடிய அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 பேர் அமைக்கப்பட்ட இந்த குழுவிற்கு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைவராக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • burundi-fire-8

    புரூண்டி நாட்டில் சிறையில் பயங்கர தீ விபத்து: 38 கைதிகள் தீயில் கருதி உயிரிழப்பு

  • pain-kill

    வலியின்றி தற்கொலை செய்துகொள்ள வந்துவிட்டது Sarco Capsule எந்திரம்!: ஒரு நிமிடத்தில் உயிரை பறிக்குமாம்..!!

  • Army_helicopter_crash_Coonoor

    குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்

  • tomato01

    பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கிலோ 73 ரூபாய்க்கு விற்பனை

  • vaikundaa1

    பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 5ம் திருநாள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்