SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நன்னிலம் அருகே வாய்க்கால் மதகில் மோதி பேருந்து கவிழ்ந்தது: 4 பேர் படுகாயம்

2021-10-28@ 15:22:07

நன்னிலம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள சன்னாநல்லூர் அருகில் மயிலாடுதுறை - திருவாரூர் நெடுஞ்சாலையில் கீழப் பனங்குடி இடத்தில் பேருந்தை வேகமாக, திருப்பும் பொழுது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வாய்க்கால் மதகில் மோதி, வாய்க்காலில் தலைகுப்புற கீழே விழுந்தது.

இதில் பயணித்து வந்த 25 பயணிகளில் பட்டுக்கோட்டையை சேர்ந்த லட்சுமி (40), ஹரிஷ் வயது (11), ரித்தீஷ் (5), மன்னார்குடியை சேர்ந்த ஜெயா ( 52) ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர்.காயமடைந்தவர்களை, மருத்துவ சிகிச்சைக்காக, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுனர் கிருஷ்ணராஜ் (30), பேருந்து நடத்துனர் ராமு ஆகியோரிடம், நன்னிலம் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர். அதிகாலையில் நடந்த பேருந்து விபத்தால் நன்னிலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • burundi-fire-8

    புரூண்டி நாட்டில் சிறையில் பயங்கர தீ விபத்து: 38 கைதிகள் தீயில் கருதி உயிரிழப்பு

  • pain-kill

    வலியின்றி தற்கொலை செய்துகொள்ள வந்துவிட்டது Sarco Capsule எந்திரம்!: ஒரு நிமிடத்தில் உயிரை பறிக்குமாம்..!!

  • Army_helicopter_crash_Coonoor

    குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்

  • tomato01

    பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கிலோ 73 ரூபாய்க்கு விற்பனை

  • vaikundaa1

    பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 5ம் திருநாள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்