SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சசிகலா விவகாரத்தில் ஓபிஎஸ் பேசியதில் என்ன தவறு? : செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி!

2021-10-28@ 14:34:03

சென்னை : அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு செய்வார்கள் என்று ஓ பன்னீர் செல்வம் கூறியதற்கு அதிமுகவில் ஆதரவு பெருகி வருகிறது. மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், 'சசிகலா குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் கருத்து சொன்ன பிறகு, இணை ஒருங்கிணைப்பாளர் எந்த கருத்தையும் சொல்லவில்லை. அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற கருத்தை தான் ஓ பன்னீர் செல்வம் சொன்னார். அதில் என்ன தவறு இருக்கிறத' என்று கேள்வி எழுப்பினார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக சரிவை நோக்கி சென்று கொண்டு இருப்பதால் ஓ பன்னீர் செல்வம் சரியான முடிவை எடுக்க வேண்டும். கட்சியை பொறுத்தவரை ஓ பன்னீர் செல்வத்திற்கே அதிகாரம் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை கட்சியை விட்டு நீக்கிவிட்டு சசிகலா அல்லது ஓ பன்னீர் செல்வம் அதிமுகவின் ஒற்றை தலைமையாக வேண்டும் என வலியுறுத்தினார்.

மாவட்ட அளவிலான அதிமுக நிர்வாகிகள் பலரும் ஓ பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர்.சசிகலாவை அதிமுக இணைப்பது குறித்த ஓபிஎஸ் கருத்துக்கு அதிமுக நிர்வாகிகள் இடையே ஆதரவு பெருகி வருவது எடப்பாடி தரப்பை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bulgaria-24

    பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

  • murasoli-23

    ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

  • selem-gas-23

    சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

  • andhra-flood-22

    ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

  • tajmahal-love

    தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்