SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

க்ரைம் நியூஸ்

2021-10-28@ 06:25:45

போக்சோவில் வாலிபர் கைது: வில்லிவாக்கத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய ஆவடியை சேர்ந்த விஷாலை(22) வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

ரவுடிகள் கைது: முகப்பேர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜன்(48), நேற்று முன்தினம் 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் ₹1,000த்தை பறித்தனர். அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மடக்கி நொளம்பூர் போலீசில் ஒப்படைத்தனர். புகாரின்பேரில் போலீசார் அம்பத்தூரை சேர்ந்த ரவுடி சேனிஸ் (எ) சேனிஸ்குமார்(23), அவரது கூட்டாளி ஆவடியை சேர்ந்த ரவுடி செல்வக்குமார் (எ) ஆனஸ்ட் ராஜ்(25) ஆகியோரை கைது செய்தனர்.

மயான அலுவலகம் உடைப்பு: எண்ணூர் விரைவு சாலை திருவொற்றியூர் அருகே மாநகராட்சி மயான நவீன எரிவாயு தகன மேடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த தகனமேடை வளாகத்தில் மதுபோதையில் வந்த ஒரு கும்பல் அங்கிருந்த மாநகராட்சி உதவியாளரிடம் தகராறில் ஈடுபட்டது. பின்னர் அங்கு தகன மேடை அலுவலக கண்ணாடிகளை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. புகாரின்பேரில் திருவொற்றியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

மசாஜ் சென்டரில் கொள்ளை: வேளச்சேரி 100 அடி சாலையில் தனியார் சலூன் மற்றும் ஸ்பா சென்டர் உள்ளது. நேற்று முன்தினம் 5 பேர் பட்டாக்கத்தியுடன் நுழைந்து ஊழியர்களை தாக்கி ₹30 ஆயிரம், 7 செல்போன்கள் மற்றும் 5 சவரனை பறித்து தப்பியது. புகாரின்பேரில் வேளச்சேரி போலீசார் நீலாங்கரை அரிகிருஷ்ணன்(23), மணிகண்டன்(24) ஆகியோரை கைது செய்து முக்கிய குற்றவாளியான வழக்கறிஞர் இளையராஜா(26) உள்பட 4 பேரை தேடிவருகின்றனர்.

லாரி மோதி பேராசிரியை பலி: கோவிலம்பாக்கத்தை சேர்ந்தவர் அபீதா(38), தனியார் பொறியியல் கல்லூரியில் இணை பேராசிரியர். நேற்று முன்தினம் வேலை முடித்து ஸ்கூட்டரில் கோவிலம்பாக்கம் சென்றபோது பின்னால் வந்த கழிவுநீர் லாரி மோதி பலியானார். புகாரின்பேரில் மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் டிரைவர் ரகமதுல்லாவை(34) கைது செய்தனர்.

வழிப்பறி ஆசாமிகள் கைது: கொளத்தூர் லட்சுமிபுரம் லலிதா நகரை சேர்ந்தவர் சூரியன்(29). நேற்று முன்தினம் கொரட்டூர் 200 அடி சாலையில் காரில் சென்றபோது பைக்கில் வந்த இருவர் செல்போனை பறித்து தப்பினர். புகாரின்பேரில் கொரட்டூர் போலீசார் அயனாவரம் பாஸ்கர்(30), ஆகாஷை(21) கைது செய்தனர்.  

வாலிபர் தற்கொலை: ஜாபர்கான்பேட்டை மங்கை தெருவை சேர்ந்தவர் கேசவராஜ்(38). இவரது  மனைவி கவுரி. கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். மனைவியை பிரிந்த மன உளைச்சலில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கட்டிட கான்ராக்டர் கழுத்து கொலை: இரும்புலியூரை சேர்ந்தவர் மஞ்சுநாதன்(33). கட்டிட கான்ராக்டர். நேற்று முன்தினம் வழக்கம்போல் பணிக்கு சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. அருகிலுள்ள சுடுகாட்டில் மர்மமான முறையில் கழுத்து அறுக்கபட்ட நிலையில் குடிபோதையில்  மஞ்சுநாதன் உயிரிழந்து கிடந்தார். புகாரின்பேரில் சேலையூர் போலீசார் கொலையா அல்லது  தற்கொலையா  என விசாரித்து வருகின்றனர்.

பணியில் இருந்த எஸ்ஐ மரணம்: விழுப்புரத்தை சேர்ந்தவர் ஹரிராமன்(58). சேலையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர். நேற்று மதியம் காவல் நிலையத்தில் அவரது இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bulgaria-24

  பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

 • murasoli-23

  ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

 • selem-gas-23

  சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

 • andhra-flood-22

  ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

 • tajmahal-love

  தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்