கும்மிடிப்பூண்டி அருகே அயநல்லூரில் முதல்வரின் சிறப்பு பட்டா முகாம்: எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்பு
2021-10-28@ 00:29:17

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த அயநல்லூர் ஊராட்சியில் தமிழக முதல்வரின் சிறப்பு பட்டா திருத்தம், மாற்றம் உள்பட பட்டா முகாம் நேற்று நடந்தது. கும்மிடிப்பூண்டி ஒன்றியம் அயநல்லூர் ஊராட்சியில் வருவாய்த்துறை சார்பில் தமிழக முதல்வரின் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் சிறப்பு முகாம் வட்டாட்சியர் மகேஷ் தலைமையில் நேற்று நடந்தது. அயநெல்லூர் ஊராட்சி தலைவர் லலிதா கல்விச்செல்வம், துணை தலைவர் சுதா வேலு, ஊராட்சி செயலாளர் குருமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் ராமசிவம், விஏஓ காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்து கொண்டு சிறப்பு முகாமை துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது.
தமிழக முதல்வரின் சீரிய ஆட்சியில் அனைத்து நல திட்டங்களும் மக்களை தேடி செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தொடர்ந்து, மக்களை தேடி பட்டா உள்பட சான்றிதழ்களை வழங்கும் திட்டம் தமிழக முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி புதன், வெள்ளி கிழமைகளில் குறிப்பிட்ட பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் அதிகாரிகள் பங்கேற்று, மக்களுக்கான சான்றிதழ்களை வழங்க உள்ளனர் என்றார்.
இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் கே.வி.ஜி.உமாமகேவரி, திமுக ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் மு.மணிபாலன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், நகர செயலாளர் அறிவழகன், ஊராட்சி தலைவர்கள் கீழ்முதலம்பேடு கே.ஜி.நமச்சிவாயம், ஏனாதி மேல்பாக்கம் உதயகுமார், பிரபு, கொள்ளானூர் துர்காதேவி வெங்கடேசன், திமுக நிர்வாகிகள் திருமலை, மஸ்தான், ரமேஷ், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:
Chief Minister's Special Patta Camp at Gummidipoondi Ayanallur MLA DJ Govindarajan கும்மிடிப்பூண்டி அயநல்லூரில் முதல்வரின் சிறப்பு பட்டா முகாம் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன்மேலும் செய்திகள்
நடிகை பலாத்கார காட்சிகள் அடங்கிய மெமரி கார்டை தடயவியல்; பரிசோதனைக்கு அனுப்ப கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
நெல்லை - மேட்டுப்பாளையம், தாம்பரம் உள்ளிட்ட 4 சிறப்பு ரயில்களை நீடிப்பு செய்ய தெற்கு ரயில்வே முடிவு: ரயில்வே வாரியத்தின் அனுமதிக்காக காத்திருப்பு
நாலுமாவடியில் நாளை மறுநாள் புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனை திறப்பு விழா
குன்னூர் பள்ளத்தாக்கு பகுதியில் குட்டிகளுக்கு நடைபயிற்சி அளிக்கும்; 10 யானைகள்
குழந்தை பாக்கியம் தரும் மருத்துவ குணம் வாய்ந்தது; குன்னூர் பர்லியார் பண்ணையில் துரியன் பழம் சீசன் துவங்கியது
இலங்கை கடற்படை கைது செய்த காரைக்கால், தமிழக மீனவர்கள் 12 பேரை விடுவிக்க நடவடிக்கை: வெளியுறவு அமைச்சருக்கு ரங்கசாமி கடிதம்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!