SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தட்டுப்பாடில்லை

2021-10-28@ 00:27:46

தமிழகத்தில் தற்சமயம் சாதகமான  பருவமழை சூழல் நிலவி வருகிறது. மேலும் அண்டை மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்து நிரம்பியுள்ளது. எனவே அணைகளின் உறுதி தன்மையை ஆய்வு செய்து உபரி நீரை வெளியேற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நடப்பு சம்பா பயிர்கள் செழிப்பாக வளர்ந்து விவசாயிகள் வளம் பெறுவதற்கு தேவையான தண்ணீரும் உள்ளது. எனவே, விவசாயத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை என்பது தற்போதைக்கில்லை.

நெல், பயிறு, சிறுதானியம், எண்ணெய் வித்துக்கள், கரும்பு, பருத்தி ஆகியன 24,829  லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்படும் என்று  தெரியவருகிறது. எனவே, விவசாயிகள் தங்கள் பயிர் சாகுபடியை எந்த வித இடையூறும் இன்றி நல்லபடியாக செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. விவசாய பயிர்கள் நன்கு செழித்து வளரவும், ஆரோக்கியமான சாகுபடியை நல்கவும் அதை புழு, பூச்சி, எலி போன்றவற்றின் தாக்குதல்களில் இருந்து காக்கவும் விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு தேவையான உரம், யூரியா இன்றி கஷ்டப்படக்கூடாது என்பதை உணர்ந்து தமிழகத்துக்கு தேவையான உரம் மற்றும் யூரியாவை உடனடியாக வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது.

இந்த கடிதத்தை பரிசீலித்த ஒன்றிய அரசு தமிழகத்துக்கு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை ஒதுக்கீடு செய்துள்ளது. யூரியா, டிஏபி, பொட்டாஷ் உரங்கள் தட்டுப்பாடின்றி தமிழக விவசாய மக்களுக்கு கிடைத்திட உரிய காலத்தில் குறைவின்றி வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காரைக்கால் துறைமுகத்துக்கு வரவுள்ள 90 ஆயிரம் மெ.டன்  அப்படியே தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நவ.2ம் தேதி காக்கிநாடா துறைமுகத்துக்கு வரும் டி.ஏ.பி உரத்தில் பெரும்பங்கு தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பல்வேறு உர நிறுவனங்களில் இருந்து உரத்தை பெறுவதற்கான நடவடிக்கையில் வேளாண் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி துறைமுகத்தில் இருப்பில் உள்ள 27 ஆயிரம் மெ.டன் பொட்டாஷ் உரத்திலிருந்து தமிழக மாவட்டங்களுக்கு அதிக அளவில் அனுப்பவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதால் விவசாயிகள் தங்கள் பயிர்களை முறையாக பாதுகாத்து உரம் தெளித்து செழிப்பான சாகுபடியை காணமுடியும். விவசாய தேவை மற்றும் விவசாயிகளின் தேவையை முன்கூட்டியே அறிந்து தமிழக முதல்வரும், தமிழக அரசும் உரத்தட்டுப்பாடு ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதற்கு விவசாய சங்கங்கள் பாராட்டு தெரிவித்துள்ளது.

விவசாயிகள் தங்கள் கோரிக்கையை போராட்டத்தின் மூலம் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியமே இல்லாமல் முதல்வர் விவசாயிகள் தேவைகளை பூர்த்தி செய்திருப்பது வரவேற்புக்குரியது என்று விவசாய தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bulgaria-24

  பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

 • murasoli-23

  ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

 • selem-gas-23

  சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

 • andhra-flood-22

  ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

 • tajmahal-love

  தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்