SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24.52 கோடியை தாண்டியது: 49.78 லட்சம் பேர் உயிரிழப்பு

2021-10-27@ 07:43:12

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட தொற்றின் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்கத்தொடங்கியுள்ளது. இதனால், உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. தற்போதைக்கு தடுப்பூசியால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறிவருவதால், தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

டெல்டா வகை கொரோனா பரவலால் ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலகம் முழுவதும் இதுவரை 24,52,75,484பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 49,78,725 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 22,23,49,743 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 1,79,47,016 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 1,78,71,944 பேர் லேசான தொற்று அறிகுறிகளுடனும், 75,072 பேர் கவலைக்கிடமான நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • robo-teacher-2

    இனி டீச்சர்னா பயம் கிடையாது: பாலஸ்தீனத்தில் ஆசிரியராக களமிறக்கப்பட்டுள்ள ரோபோட்...நட்பு பாராட்டும் மாணவர்கள்..!!

  • dog-police-2

    சென்னை எழும்பூர் காவல் அருங்காட்சியகத்தில் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி: ஆர்வமுடன் கண்டு ரசிக்கும் பள்ளி மாணவர்கள்...கை குலுக்கி உற்சாகம்..!!

  • MKStalin_Inspectetd_Thoothukudi

    தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • IncomeTax_Raid_SaravanaStores

    சென்னையில் உள்ள அனைத்து சரவணா ஸ்டோரிஸ் கடைகளில் வருமான வரித்துறை சோதனை

  • Landslide_Tirupati

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் மண்சரிவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்