SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீண்டும் கொரோனா

2021-10-27@ 00:03:50

பாடாய்படுத்திய கொரோனா கட்டுக்குள் வந்து தற்போது தான் உலகம் மெதுவாக இயங்க ஆரம்பித்து இருக்கிறது. அதற்குள் மீண்டும் சீனாவில்  டெல்டா வகை வைரஸ் தாக்கம் ஏற்பட்டு இஜினா உள்ளிட்ட நகரங்கள் சீல் வைக்கப்பட்டு இருப்பதாக வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. சீனாவின் இஜினா, கான்சு, நிங்சியா, பீஜிங், ஹூபெய், ஹூனான் உள்ளிட்ட 11  மாகாணங்களிலும் புதிய வைரஸ் தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன்  காரணமாக சீன அரசு மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. தலைநகர்  பீஜிங்கில் வரும் 31ம் தேதி மராத்தான் பந்தயம் நடத்த  திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது டெல்டா வைரஸ் பரவல் காரணமாக இந்த போட்டி  ரத்து செய்யப்பட்டுள்ளது. இஜினா நகருக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கான்சு  மாகாணத்தின் லான்சோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பஸ், டாக்சி சேவைகள் ரத்து  செய்யப்பட்டுள்ளன.

தொற்று பாதிப்புள்ள எவரும் தலைநகர் பீஜிங்கில் நுழைய  தடை விதிக்கப்பட்டுள்ளது. பீஜிங் வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை  கட்டாயம் கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா  வைரசின் பிறப்பிடமான சீனா, கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக மிக விரைவாக முதல் அலை  பாதிப்பை கட்டுப்படுத்தியது. உலகம் முழுவதும் பல அலைகளாக கொரோனா  மிரட்டினாலும், சீனாவில் 2வது அலை ஏற்படவே இல்லை. இந்தியாவில் டெல்டா  வைரசால் கடும் பாதிப்பு ஏற்பட்ட போதிலும், சீனா தப்பியது. தற்போது மீண்டும் ஊரடங்கு நிலைக்கு சீனா செல்வது அங்குள்ள மக்கள்  மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில்  84 சதவீதம் பேர் 2 டோஸ்  தடுப்பூசி போட்டுள்ளனர். ஆனாலும், தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு  சக்தியையும் மீறி டெல்டா வைரஸ் அதிகம் பேருக்கு பரவி வருகிறது. இந்தியாவில் இப்போதுதான் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் 130 கோடி பேர் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில்  31 கோடி பேர் மட்டுமே இரண்டு தடுப்பூசிகள் போட்டுள்ளனர். மேலும் இத்தனை மாதங்கள் தாக்கத்திற்கு பிறகு இப்போதுதான் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை மெதுவாக சரிய ஆரம்பித்துள்ளது.

இந்தநிலையில் தொடர் பண்டிகைகள் தொடங்கி விட்டன. மக்களை கட்டுப்படுத்தமுடியாத சூழல் தற்போது இந்தியாவில் உள்ளது. சீனாவில் பரவும் வைரசின் தாக்கம் கொஞ்சம் இங்கே வந்தாலும் ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்து நிற்க வேண்டிய நிலை ஏற்படும். விழாக்காலங்களில் எளிதாக இந்தியா முழுவதும் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது. எனவே முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. சீனாவில் இருந்து எந்த நாடு வழியாக யார் வந்தாலும் அவர்களை இந்தியாவுக்குள் அனுமதிப்பதில் அதிக கட்டுப்பாடுகளை போட வேண்டும். மேலும் வெளிநாட்டு பயணிகளுக்கு இப்போதே 21 நாள் தனிமைப்படுத்தும் முகாம்களை கடுமையாக பின்பற்ற வேண்டும். அவர்களை தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் மீண்டும் ஒரு கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bulgaria-24

  பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

 • murasoli-23

  ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

 • selem-gas-23

  சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

 • andhra-flood-22

  ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

 • tajmahal-love

  தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்