SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாய்ண்ட்...

2021-10-27@ 00:02:11

* பிரெஞ்ச் ஓபன் பேட்மின்டன் போட்டி பாரிஸ் நகரில் நேற்று தொடங்கியது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின்  துருவ் கபிலா - சிக்கி ரெட்டி இணையை  மலேசியாவின் பெங் சூன் சான் -  லியு யிங் கோ இணை  21-19, 21-19 என நேர் செட்களில் போராடி வென்றது.
* உலக கோப்பை ஆட்டத்தில் இந்திய அணியை முதல் முறையாக வீழ்த்தியதை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் பிரபலங்கள் சிலரும், ரசிகர்களும் மதரீதியாக கருத்து தெரிவித்தனர். இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.
* ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் நவம்பர் 24ம் தேதி தொடங்கி டிசம்பர் 5ம் தேதி வரை நடைபெற உள்ள ஆண்கள் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்கள் இன்றி பூட்டிய அரங்குகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* பெல்கிரேடில் நடக்கும் உலக பாக்சிங் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 63.5 கிலோ எடை பிரிவு 2வது சுற்றில் விளையாட இந்திய வீரர் ஷிவ தாபா தகுதி பெற்றுள்ளார். முதல் சுற்றில் அவர் கென்யாவின் விக்டர் நியாடெராவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். 57 கிலோ எடை பிரிவில் களமிறங்கிய ஆகாஷ் சங்வான் 5-0 என்ற கணக்கில் துருக்கியின் பர்கான் ஆடமை வென்றார்.
* அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் அணிகள் எந்தெந்த பிரிவில் இடம் பெறுகின்றன என்பதை தீர்மானிப்பதற்கான குலுக்கல், கோலாலம்பூரில் இன்று நடைபெறுகிறது. பிரதான சுற்றில் விளையாட இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சீனா, தாய்லாந்து, தென் கொரியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், ஈரான், சீன தைபே, மியான்மர், இந்தோனேசியா ஆகிய 12 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
* இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் முறைப்படி விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து, அவர் பயிற்சியாளராக பொறுப்பேற்பது அனேகமாக உறுதியாகிவிட்டதாக பிசிசிஐ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bulgaria-24

  பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

 • murasoli-23

  ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

 • selem-gas-23

  சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

 • andhra-flood-22

  ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

 • tajmahal-love

  தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்