உயர்சாதி ஏழைகள் இடஒதுக்கீடு வழக்கு: நீட் தேர்வு கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் தடை
2021-10-25@ 14:14:38

டெல்லி: உயர்சாதி ஏழைகள் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு முடியும் வரை முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. உயர் சாதி ஏழைகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.
வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு 24ஆம் தேதி முதல் வரும் 29ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக மூத்த வழக்கறிஞர் முறையிட்டார். இதனை பரிசீலித்த நீதிபதிகள் உயர் சாதி ஏழைகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒன்றிய அரசு அறிவித்துள்ள இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்களை விசாரித்து முடிக்கும் வரை முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை தொடங்க கூடாது என உத்தரவிட்டனர்.
உயர் சாதி ஏழைகளுக்கான வருவாய் வரம்பு தொடர்பாக அண்மையில் ஒன்றிய அரசுக்கு பல கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம் வரும் 28ஆம் தேதி மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்கள் கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்
தொடரும் அவலம்!: டெல்லியில் பெண்களுக்கு எதிராக 1,100 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு.. ப.சிதம்பரம் கடும் கண்டனம்..!!
மகாராஷ்டிராவில் 4 தொழிலதிபர்கள் தொடர்புடைய இடங்களில் ஐ.டி. ரெய்டு: கணக்கில் வராத ரூ.390 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல்..!!
2 ஆண்டுகளுக்கு பின் உள்நாட்டு விமான கட்டணங்களுக்கான உச்ச வரம்பை நீக்கிய ஒன்றிய அரசு: ஆக.31 முதல் அமல்..பயணிகள் கவலை..!!
இந்தியாவில் ஒரே நாளில் 16,299 பேருக்கு கொரோனா... 53 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!
எல்லையில் பதற்றம்; காஷ்மீர் ராணுவ முகாமில் தற்கொலைப்படை தாக்குதல்: இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம்
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!