விழுப்புரம் எஸ்பி ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போதை வாலிபர் கைது
2021-10-25@ 01:33:14

விழுப்புரம்: விழுப்புரம் எஸ்பி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் எஸ்பி அலுவலக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு, ஒரு நபர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, எஸ்பி அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், 10 நிமிடங்களில் வெடித்துவிடும் என்றும் மிரட்டல் விடுத்துவிட்டு போனைத் துண்டித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் எஸ்பி நாதாவுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கிடங்களைச் சேர்ந்த முருகன் மகன் அஜய் (23) என்பது தெரியவந்தது. இவர் மீது திருட்டு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் குடிபோதையில் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
மேலும் செய்திகள்
சேலம்-விருத்தாசலம் பயணிகள் ரயில் இன்று முதல் தினமும் இருமுறை இயக்கம்
கொடைக்கானலில் மலர் கண்காட்சி நாளை துவக்கம்
விழுப்புரத்தில் பரபரப்பு கழுத்தை அறுத்து முன்னாள் கவுன்சிலரை கொல்ல முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
ஓஎன்ஜிசி குழாய் உடைந்து கச்சா எண்ணெய் பரவியதால் 2 ஏக்கர் விவசாய நிலம் சேதம்
அழகர்கோவில் பகுதியில் மண்பானை தயாரிக்கும் பணி தீவிரம்
பஸ் கண்ணாடியை உடைத்து டிரைவர் கண்டக்டர் மீது தாக்குதல் : தொழிலாளிக்கு வலை
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை