முதல்வர் மு.க.ஸ்டாலின் தி.மு.கவில் இணைந்த வடசென்னை அ.தி.மு.க, அ.ம.மு.க முக்கிய நிர்வாகிகள்
2021-10-24@ 16:27:13

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க, அ.ம.மு.க முக்கிய நிர்வாகிகள் தி.மு.கவில் இணைந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று காலை, சென்னை வடக்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த திரு.வி.க.நகர் தெற்கு பகுதி செயலாளர் கே.சுப்புரு, வடசென்னை தெற்கு (கிழக்கு மாவட்டப் பொருளாளர் ஆர்.மகேஷ், வடசென்னை தெற்கு (கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கே.ராஜாமுகமது வடசென்னை வடகிழக்கு மாவட்ட மருத்துவர் அணி மாவட்டச் செயலாளர் மருத்துவர் பி.புகழேந்தி,
வடசென்னை கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்டச் செயலாளர் எஸ்.பி.எஸ்.ராஜா, இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மாநில தலைவர் மருத்துவர் பி.செந்தமிழ்பாரி, பெரம்பூர் பகுதி எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கே.எஸ்.அஸ்லாம், வட்டச் செயலாளர் எஸ்.பரிமளம், ஆர்.கே.நகர் மேற்கு பகுதி துணைச் செயலாளர் எஸ்.வி.ரவி, வடசென்னை கிழக்கு எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.மூர்த்தி, வடசென்னை தெற்கு (கிழக்கு) எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட இணைச் செயலாளர் ராமமஞ்செரி ஆர்.நடராஜன், வடசென்னை மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ந.சேகர் (எ) பிரஸ் சேகர்,
வடசென்னை தெற்கு மாவட்டம், 55வது வட்ட அவைத்தலைவர் ம.மனோகர், மற்றும் அ.ம.மு.க. கட்சியைச் சேர்ந்த மாநில வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் ஆகியோர். தி.மு.க.வில் இணைந்தனர். அதுபோது இந்து அறநிலயைத் துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே.சேகர்பாபு, வடசென்னை தொகுதி கழக நாடாளுமன்ற உறுப்பினர் வி.கலாநிதி வீராசாமி, சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தா.இளையஅருணா, கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஆர்.டி.சேகர், ஜே. ஜான் எபினேசர் மற்றும் பகுதிச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
மற்ற 6 பேரையும் விடுவிக்க நடவடிக்கை பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது: அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு
சொல்லிட்டாங்க...
முதல்வருடன் அதிமுக எம்பி ரவீந்திரநாத் தனியாக சந்திப்பு: தொகுதி கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்
மெகா கூட்டம் முடிஞ்சதும் பெரிய விக்கெட் காலி வெளியேறினார் ஹர்திக்: போன் பேசுறாங்க... சிக்கன் சாண்ட்விச் சாப்பிடுறாங்க... காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பரபரப்பு கடிதம்
தேவகவுடா பிறந்த நாள் முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு வெள்ளைத்துணியால் வாயை கட்டி காங்கிரசார் இன்று அறப்போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!