கஞ்சா கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை..!
2021-10-24@ 11:09:36

சென்னை: சென்னை போர் நினைவுச்சின்னம் அருகே நடைபெற்ற மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் பண்டிகை காலம் என்பதால் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது; மக்கள் கூடும் இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து காவல்துறை கண்காணித்து வருகிறது. Face Detection மூலம் 7,000-க்கும் மேற்பட்ட திருடர்களை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கஞ்சா கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா கடத்தியதற்காக 179 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார். சென்னை சாந்தோமில் நடைபெற்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை இயக்குநர் கிருத்திகா உதயநிதி துவக்கி வைத்தார். நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம் பங்கேற்றார். பின்னர் பேசிய கிருத்திகா உதயநிதி; மார்பக புற்றுநோயால் மரணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
விழிப்புணர்வு இருந்தாலே அச்சப்பட தேவையில்லை. குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கும் போதிய விழிப்புணர்வு தேவை என கூறினார்.
மேலும் செய்திகள்
சிறப்பு மின்சார ரயில்கள் ரத்து
படத்தில் அரசியல் வசனங்கள் இயக்குனரிடம் அஜித் மறுப்பு
டிமாண்டி காலனி 2ம் பாகத்தில் அருள்நிதி
தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் ரூ.53 கோடியில் பணிகள் மேற்கொள்ள தீர்மானம்: துணை மேயர் தகவல்
திருமணமான ஒன்றரை ஆண்டில் புதுப்பெண் தற்கொலை: போலீசில் தந்தை புகார்
கர்நாடகத்தில் இருந்து ஒரத்தநாடு திருமண விழாவிற்கு வந்த 3.6 டன் அழுகிய இறைச்சி பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை