SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீபாவளி ஷாப்பிங் போறீங்களா?: உங்களுக்காக சில டிப்ஸ் மக்களே...

2021-10-24@ 00:50:54

தீபாவளி நெருங்கி விட்டது. பாக்கெட்ல பணம் இருக்கோ, இல்லையோ? கடன் வாங்கியாவது கண்டிப்பாக ஷாப்பிங் செய்தே ஆக வேண்டும். போகும்போது வெறுங்கையோடு போவோம்... வரும்போது எக்ஸ்டிரா 2 கைகள் இருந்தால் தேவலாம் என்கிற வகையில் கட்டைப்பைகள் உட்பட ஷாப்பிங் சாமான்கள் கை நிறைய சேர்ந்திரும். பட்ஜெட் பாக்கெட்டை கடிப்பது ஒருபுறம் இருந்தாலும், கவனத்துடன் நீங்கள் ஷாப்பிங் செய்ய சில டிப்ஸ் இதோ...!

* நாம் விரும்புகிறோமோ இல்லையோ? தீபாவளி ஷாப்பிங்கில் திருவிழா கூட்டத்தை தவிர்க்க முடியாது. இதை தவிர்க்க ஜவுளி உள்ளிட்ட கடைகளுக்கு காலையிலே விரைவாக எழுந்து சென்று விடுங்கள். பெருங்கூட்டத்தை ஓரளவு தவிர்க்கலாம்.

* பொருட்கள் வாங்க வந்தவர்களை விட, அவர்களிடமிருந்து ‘‘பொருட்களை’’ கவர ஒரு கூட்டம் திரியும். உஷார்... எனவே, நகைகளை அதிகம் போட்டுச் செல்ல வேண்டாம். அதேபோல காஸ்ட்லி டிரஸ் போட்டுச் செல்லாமல், எளிமையாகவே செல்லுங்கள். கசங்கினாலும் கவலைப்பட தேவையில்லை.
* ஒவ்வொரு டிரஸ்க்கும் எண்கள் இருப்பதால், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை உறவினர்களிடமோ அல்லது தெரிந்தவர்களிடமோ விட்டுச் செல்லுதல் நல்லது. கூட்டத்தில் குழந்தைகள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்கும். சில நேரங்களில் இறக்கி விட்டு, துணிகளை தேடும்போது காணாமல் போகவும் வாய்ப்புள்ளன.
* வீட்டிலிருந்து கிளம்பும்போது ஒரு பட்டியலை தயார் செய்துக் கொள்ளுங்கள். வீட்டில் எந்தெந்த கடைகளில் யார், யாருக்கு துணிகளை எடுக்கப் போகிறோம் என்று? அதற்கான கால அளவையும் தீர்மானித்தே செல்லுங்கள். அதேபோல பார்க்கிங் வசதியையும் முன்னரே தீர்மானியுங்கள். தேவையில்லாமல் நெருக்கடியில் சிக்கி தவிப்பதை தவிர்க்கலாம்.
* பட்ஜெட்டிற்கு தகுந்த வகையில் துணிகளை தேர்ந்தெடுப்பது தொடர்பாக, ஏற்கனவே ஷாப்பிங் செய்தவர்களிடம் ஒரு ‘‘ஹலோவலாம்’’. இதன்மூலம் உங்கள் பட்ஜெட்டை தேர்ந்தெடுத்து துணிகளை தேர்வு செய்வது ஈஸியாக இருக்கும்.
* ஒரு குறிப்பிட்ட கடைகளில் தனித்தனியாக பில் செய்யும்போது, மொத்தம் எத்தனை பைகள் கைசவம் உள்ளன என்பதை எண்ணிக் கொள்ளுங்கள். பெரும்பாலும் கூடுதல் சுமையில்லாதபட்சத்தில் ஒருவரிடமே ஒப்படைத்து ஓரிடத்தில் நிற்க வைத்து எடுப்பதும் சிறந்தது தான்.
* பெரும்பாலான கடைகளில் கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, கூகுள் பே, பேடிஎம் உள்ளிட்ட வசதிகள் வந்து விட்டன. எனவே, ஏடிஎம்மில் காத்துக்கிடந்து பர்சை பிதுக்கும் அளவுக்கு பணத்தை கொண்டு செல்ல வேண்டாம். ஸ்வைப்பிங் மெஷின் மூலம் வேலையை எளிதாக்கலாம். (நாம டிஜிட்டல் இந்தியாவுல வசிக்கிறோம் பாஸ்).
* ஆடைகளை தேர்வு செய்யும்போது மிகவும் கவனம் தேவை. கடை வெளிச்சத்தில் ஒரு வண்ணமும், வீட்டிற்கு கொண்டு வந்தால் வேறு வண்ணமும் இருக்கும். ‘‘‘‘அப்புறம் நீலம்னாங்க... கருப்பா இருக்கே... எங்க சாமிக்கு ஆகாதே...’’’’ என வீட்டிற்கு சென்று படையல் போட வேண்டாம். கடை வாசலிலே ஓரமாய் அமர்ந்து, கலரை செக் செய்து கொள்ளலாம். வார்த்தை ஜாலத்தில் மயங்குவதை விட, உங்கள் மனதுக்கு பிடித்ததை தேர்வு செய்யுங்கள்.
* பர்சேஸ் பண்ணி முடிச்சாச்சு... 5 பைகள், ஒரு மனைவி, 2 பிள்ளைகளை கூட்டிக்கிட்டு பைக்கில் பயணிப்பது ரொம்ப ரிஸ்க். ஆனது ஆச்சு.. அட்ஜஸ்ட் பண்ணி போயிருவோம் என எண்ணாமல், கூடுமானவரை வாடகை வாகனங்களை பயன்படுத்தி வீட்டிற்கு செல்லுங்கள். தேவையில்லாத ரிஸ்க் எடுக்கவே வேண்டாம்.
என்ன ஓகே தானே...?

Like Us on Facebook Dinkaran Daily News
 • tamil-mozhi-25

  தமிழுக்காக உயிர்த் தியாகம்!: மொழிப்போர் தியாகிகள் திருவுருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை..!!

 • kolamnbiaaa_11

  எல்லாமே தலைகீழா இருக்கு!... கொலம்பியாவில் தலைகீழான வீட்டிற்குள் சென்று சுற்றுலா பயணிகள் ஆச்சரியம்!!

 • pandaaa11

  சீனாவின் நடைபெற்ற நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட 2021-ல் பிறந்த பாண்டா குட்டிகள்!

 • sc-maha-24

  மகாராஷ்டிராவில் 1-12ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு!: மாணவர்கள் உற்சாகம்

 • jammu-vaccine-24

  கொரோனாவை வெல்லும் பேராயுதம் தடுப்பூசி!: ஜம்மு - காஷ்மீரில் சில்லிடும் குளிரில் சென்று தடுப்பூசி செலுத்தும் சேவகர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்