ஆசனூர் அருகே பயணிகள் பீதி அரசு பஸ் கண்ணாடியை உடைத்து காட்டு யானை அட்டகாசம்
2021-10-24@ 00:50:49

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மைசூர் செல்வதற்காக தமிழக அரசு பஸ் நேற்று ஆசனூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியைவிட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று குட்டியுடன் சாலையில் நடந்துள்ளது. இதனை கண்ட டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பஸ் அருகே வந்த காட்டு யானை, பக்கவாட்டு கண்ணாடியை தும்பிக்கையால் உடைத்து சேதப்படுத்தியது. இதனால் டிரைவர் மற்றும் பயணிகள் பீதியடைந்தனர். சிறிது நேரம் பஸ் முன்பு நின்றிருந்த காட்டு யானை பின்னர் நகர்ந்து வனத்துக்குள் சென்றது.
மேலும் செய்திகள்
நெல்லை மாநகர பகுதியில் புழுதி பறக்கும் சாலைகளில் பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்
கூடலூரில் 20 வீடுகளில் திடீர் விரிசல்: பொதுமக்கள் அச்சம்
முத்துப்பேட்டை அடுத்த குன்னலூரில் மாரியாற்றில் படர்ந்த ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்
திருவாரூர் வரலாற்று சிறப்பு மிக்க கமலாலய தெப்ப குளத்தில் முழுமையாக நீர் நிரப்ப வேண்டும்: பக்தர்கள் வலியுறுத்தல்
வீட்டின் கதவை உடைத்து அரிசி சாப்பிட்ட யானை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!