SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உபி.யில் பிரதிக்யா யாத்திரையை தொடங்கி வைத்தார் பிரியங்கா

2021-10-24@ 00:04:40

லக்னோ:  உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தர பிரதேச அரசியலில் தீவிர கவனம்  செலுத்தி வருகிறார். அவர் சமீபத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட பெண்களுக்கு 40  சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில், ‘வாக்குறுதியை காப்பாற்றுவோம்’ என்ற முழக்கத்தோடு, ‘பிரதிக்யா யாத்திரை’ என்ற பெயரில், உபி.யில் காங்கிரஸ் 10 நாள் யாத்திரையை தொடங்கி உள்ளது. இதை லக்னோவில் பிரியங்கா காந்தி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது, அவர் பேசுகையில்ல, ‘‘12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன், பெண்களுக்கு இ-ஸ்கூட்டி, அனைத்து விவசாய கடன்கள்  தள்ளுபடி, கோதுமைக்கு ரூ.2,500 குறைந்தபட்ச ஆதார விலை, 20 லட்சம் பேருக்கு அரசு வேலை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட  ஏழை குடும்பங்களுக்கு பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு வருவதற்கு ரூ.25,000, மின்கட்டணம் பாதியாக குறைக்கப்படும். பெண்களுக்கான பிரத்யேக தேர்தல் வாக்குறுதிகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்,” என்றார்.  

பைசாபாத் ரயில் நிலையம் பெயரை மாற்றிய யோகி உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு,  முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள், ரயில் நிலையங்கள், பொது இடங்களின் பெயர்களை இந்து வரலாற்றின் அடிப்படையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் மாற்ற முடிவு செய்துள்ளார். இதன்படி, பைசாபாத் ரயில் நிலையத்தின் பெயரை, ‘அயோத்தியா காண்டம்’  என்று மாற்றம் செய்ய அவர் முடிவு செய்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • robo-teacher-2

  இனி டீச்சர்னா பயம் கிடையாது: பாலஸ்தீனத்தில் ஆசிரியராக களமிறக்கப்பட்டுள்ள ரோபோட்...நட்பு பாராட்டும் மாணவர்கள்..!!

 • dog-police-2

  சென்னை எழும்பூர் காவல் அருங்காட்சியகத்தில் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி: ஆர்வமுடன் கண்டு ரசிக்கும் பள்ளி மாணவர்கள்...கை குலுக்கி உற்சாகம்..!!

 • MKStalin_Inspectetd_Thoothukudi

  தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 • IncomeTax_Raid_SaravanaStores

  சென்னையில் உள்ள அனைத்து சரவணா ஸ்டோரிஸ் கடைகளில் வருமான வரித்துறை சோதனை

 • Landslide_Tirupati

  திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் மண்சரிவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்