SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மருத்துவ படிப்பில் ஓபிசி.க்கு 27% இடஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தில் திமுக எழுத்துப்பூர்வ அறிக்கை

2021-10-24@ 00:04:34

புதுடெல்லி: மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் திமுக எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்கும்படி கடந்த 2020ம் ஆண்டு ஒன்றிய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிமன்றம், ‘அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒவ்வொரு மாதிரியான இடஒதுக்கீட்டை பின்பற்ற முடியாது.

மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி.க்கு 27 சதவீத இடஒதுக்கீடு அனுமதிக்கக் கூடியது. அதே நேரத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு, மொத்த இடஒதுக்கீட்டு அளவான 50 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளது. அதனால், உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அந்த இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது,’ என தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு எதன் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது?’ என ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பியது. இதற்கு விரிவான பதில் தாக்கல் செய்யும்படி கடந்த 21ம் தேதி உத்தரவிட்டது. இந்த வழக்கில் திமுக.வும் மனுதாரராக உள்ளது. இந்நிலையில், 27 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக திமுக சார்பில் நேற்று எழுத்துபூர்வ அறிக்கை  தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மருத்துவப் படிப்பில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும்படி உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எந்த குந்தகமும் ஏற்படக் கூடாது.

உயர் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடும், ஓபிசி.க்கான 27 சதவீத இடஒதுக்கீடும் வெவ்வேறு. இரண்டையும் ஒப்பிட கூடாது. ஓபிசி.இடஒதுக்கீடு தொடர்பாக வழக்கு தொடர்ந்து கொண்டே இருக்க முடியாது. அதனால், தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுபடி 27 சதவீத இடஒதுக்கீட்டை மருத்துவ யுஜி, பிஜி, பல் மருத்துவம் ஆகிய அனைத்திற்கும் வழங்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • IncomeTax_Raid_SaravanaStores

    சென்னையில் உள்ள அனைத்து சரவணா ஸ்டோரிஸ் கடைகளில் வருமான வரித்துறை சோதனை

  • Landslide_Tirupati

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் மண்சரிவு

  • Pelicans_wild lake_Velachery

    வேளச்சேரி-மேடவாக்கம் கூட்டு சாலையில் உள்ள காட்டு ஏரியில் உணவுக்காக காத்திருக்கும் கூழைக்கடா (பெலிக்கான்) நீர்பறவைகள்

  • Austalia_Vaccination

    ஆஸ்திரியாவில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்

  • omicron virus

    ஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்