பைசூலுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுகின்றனர் நடிகை ராதா பரபரப்பு புகார
2013-12-12@ 12:48:56

தொழிலதிபர் பைசூலுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாகவும் வழக்கை திசை திருப்புவதாகவும் நடிகை ராதா கூடுதல் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். சுந்தரா டிராவல்ஸ் திரைப்பட கதாநாயகி ராதா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் தொழிலதிபர் பைசூல் என்பவர் தன்னை காதலித்து மோசடி செய்து விட்டார். தன்னிடம் வாங்கிய ரூ.50 லட்சத்தை திருப்பி தரவில்லை. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இதேபோல், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்கள் மூலம் போதை பொருள் கடத்துவதாக, பைசூல் மீது அக்ரம்கான் என்பவரும் புகார் அளித்தார்.இந்த 2 புகார்கள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பைசூலின் சகோதரி மரியம் பீவி, புகாரை வாபஸ் வாங்க வேண்டுமானால் ரூ.1 கோடி தர வேண்டும் என்று தன்னை சிலர் மிரட்டுவதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்திருந்தார். இந்த 3 புகார்கள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இணை கமிஷனர் திருஞானத்தை அவரது அலுவலகத்தில் நடிகை ராதா சந்தித்தார். அப்போது என் வழக்கை விசாரிக்கும் வடபழனி உதவி கமிஷனர் மற்றும் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரேகா ஆகியோர் பைசூலுக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் அளித்திருந்தார்.
இதைதொடர்ந்து, நடிகை ராதா நேற்று மதியம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவத்தை சந்தித்து பேசினார். பின்னர் வெளியில் வந்த ராதா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பைசூல் என்னுடன் 6 ஆண்டுகள் குடும்பம் நடத்தியும், தொழில் சம்பந்தமாக ரூ.50லட்சத்துக்கு மேல் என்னிடம் பணம் பெற்றும் என்னை ஏமாற்றிவிட்டார். இதுகுறித்து நான் புகார் அளித்தும் இதுவரை போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பைசூல் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவையும் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஆனால், இதுவரை பைசூலை போலீசார் கைது செய்யவில்லை. இந்த வழக்கை திசை திருப்ப போலீசார் பைசூலுக்கு ஆதரவாக செயல்படுவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. தலைமறைவாக உள்ள பைசூல் போலீசாருக்கு தெரியாமல் எப்படி தொலைக்காட்சிக்கு மட்டும் பேட்டி அளிக்கிறார். அவர் வெளியில் இருந்தால் சாட்சிகளை அழித்து விடுவார். இதனால் கூடுதல் கமிஷனர் நல்லசிவத்தை சந்தித்து பைசூலை கைது செய்ய வலியுறுத்தினேன். அதற்கு அவர் விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் என்றார்.
மேலும் செய்திகள்
சென்னையில் ‘ஜி 20’ மாநாடு கருத்தரங்கம் நடைபெறுவதையொட்டி வரும் 25ம் தேதி வரை டிரோன்கள் பறக்கத் தடை
உங்களைப் போன்றவர்களின் பாராட்டுகளே எங்களுக்கு ஊக்கம்: நடிகர் கார்த்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்
காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
4 மாவட்ட நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை.! 62 ஆக உயருகிறது நீதிபதிகளின் எண்ணிக்கை?
அடிக்கடி சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதை கைவிட வேண்டும்: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்..!
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்குகளில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவு: நாளை மறுநாள் தீர்ப்பு..!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!