SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேரளாவில் 25ம் தேதி தியேட்டர்கள் திறப்பு

2021-10-21@ 02:38:22

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா 2வது அலை பரவ தொடங்கியதை தொடர்ந்து கடந்த மே மாதம் அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டன. இந்த நிலையில் கேரளாவில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் சினிமா தயாரிப்பு சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வரும் 25ம் தேதி தியேட்டர்களை திறக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் தங்களது கோரிக்கைகளான, கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும். விடுமுறை விடப்பட்ட நாட்களில் மின்வாரியத்தின் வைப்பு நிதியை ரத்து செய்ய வேண்டும். கட்டிட வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே தியேட்டர்களை திறப்போம் என தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக நாளை(22ம் தேதி) தியேட்டர் உரிமையாளர்களுடன் கேரள காலச்சாரத்துறை அமைச்சர் சஜி செரியான் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே தியேட்டர்கள் திறக்கப்படும் என கேரள சினிமா தியேட்டர் உரிமையாளர் சங்கத்தை சேர்ந்த விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tamil-mozhi-25

    தமிழுக்காக உயிர்த் தியாகம்!: மொழிப்போர் தியாகிகள் திருவுருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை..!!

  • kolamnbiaaa_11

    எல்லாமே தலைகீழா இருக்கு!... கொலம்பியாவில் தலைகீழான வீட்டிற்குள் சென்று சுற்றுலா பயணிகள் ஆச்சரியம்!!

  • pandaaa11

    சீனாவின் நடைபெற்ற நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட 2021-ல் பிறந்த பாண்டா குட்டிகள்!

  • sc-maha-24

    மகாராஷ்டிராவில் 1-12ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு!: மாணவர்கள் உற்சாகம்

  • jammu-vaccine-24

    கொரோனாவை வெல்லும் பேராயுதம் தடுப்பூசி!: ஜம்மு - காஷ்மீரில் சில்லிடும் குளிரில் சென்று தடுப்பூசி செலுத்தும் சேவகர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்