SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வலுவான உள்ளாட்சி

2021-10-21@ 01:57:06

தமிழகம் முழுவதும் கடந்த 6 மற்றும்  9ம் தேதிகளில், 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. 153 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி  ஒன்றியங்களில் 1,421 வார்டு கவுன்சிலர்கள், 3,007 ஊராட்சி  தலைவர்கள் என மொத்தம் 27,792 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. ‘மக்களே எங்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள், உத்தரவிடுங்கள், உங்களுக்காக எந்நாளும் உழைப்போம், உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர ஆதரவு தாருங்கள்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்தேர்தலின்போது வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று, மக்கள், திமுகவுக்கு 90 சதவீதம் வெற்றிவாய்ப்பு அளித்தனர். இத்தேர்தலில் வென்றவர்கள் அனைவரும் நேற்று  அந்தந்த மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பதவி ஏற்றுக்கொண்டனர். கிட்டத்தட்ட  27 ஆயிரம் பேர் நேற்று ஒரே நாளில் பதவியேற்றனர்.

ஒரு மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்பு வலுவாக இருந்தால்தான், அம்மாநில மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தொய்வின்றி கிடைக்கும். இதை உணர்ந்து தமிழகம் முழுவதும் முழுமையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கடந்த அதிமுக ஆட்சியின்போது அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின. திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டு, இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. ஆனால், அப்போதைய அதிமுக அரசு  உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்தது. ஒரு கட்டத்தில், ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு கிடைக்காமல் போய்விடும் என்பதால், நகர்ப்புறங்களை தவிர்த்துவிட்டு, கிராமப்புறங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் புதிதாக சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், அப்போது விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களாக இருந்தாலும் சரி, நகர்ப்புறங்களாக இருந்தாலும் சரி, தார்ச்சாலை, தெருவிளக்கு, குடிநீர் விநியோகம், குப்பை அகற்றுதல், சுகாதாரம் பேணுதல்  என எல்லா பராமரிப்பு பணிகளும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமே நடக்கிறது. புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து முதல்வர் உத்தரவு பிறப்பித்தாலும், இந்த பணிகளை நிறைவேற்றுவது உள்ளாட்சி அமைப்புகளாகவே இருக்கிறது. தற்போது, மாநிலம் முழுவதும் ஊரக உள்ளாட்சிகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு விட்டதால், இப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இனி தங்கு தடையின்றி கிடைக்கும்.

இதைப்போலவே, விடுபட்ட நகராட்சி, மாநகராட்சி பகுதிகளுக்கும் உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு நடத்தி முடிக்கவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதுவும் நடந்து முடிந்துவிட்டால், ஒன்றிய-மாநில அரசுகளின் மக்கள் நல திட்டப்பணிகளை கிராமப்புறம் வரை கொண்டு செல்வதில் எவ்வித சுணக்கமும் ஏற்படாது. தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் செயல்பட வேண்டும். உள்ளாட்சியில் நல்லாட்சி தந்து, பெயரை காப்பாற்ற வேண்டும். இதுவே, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bulgaria-24

  பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

 • murasoli-23

  ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

 • selem-gas-23

  சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

 • andhra-flood-22

  ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

 • tajmahal-love

  தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்